காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கூண்டோடு தற்கொலை : அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபாவில் பேச்சு

சுப்ரிம் கோர்ட்டில் தீர்ப்பு வந்த பின்னரும் அதை நிறைவேற்ற மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் கூண்டோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என நவநீதிகிருஷ்ணன் எம்.பி. ராஜ்யசபாவில் பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கடந்த 16 நாட்களாக அதிமுக எம்.பி.க்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக 16 நாட்களாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முடக்கப்பட்டன. ராஜ்யசபா உறுப்பினர்கள் சிலர் ஓய்வு பெறுவதால், அவர்களுக்கு விடை கொடுப்பதற்காக மாநிலங்களவை இன்று செயல்பட்டது.

அப்போது அதிமுக எம்.பி. நவநீதிகிருஷ்ணனுக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் பேசும் போது, ‘‘தமிழகத்தி மிக முக்கியமான பிரச்னை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது. அதற்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். சுப்ரிம் கோர்ட்டில் தீர்ப்பு வந்த பின்னரும் அதை நிறைவேற்ற மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை’’ என்று பேசினார்.

இது ராஜ்யசபாவில் இருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழகத்திலும் அவருடைய பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close