Advertisment

சட்டவிரோத ஐ.ஆர்.சி.டி.சி இ-டிக்கெட் முன்பதிவு - 7.96 கோடி மதிப்பில் மெகா மோசடி

ரயில் பயணம் மேற்கொள்ள ரூபாய் 7.96 கோடி மதிப்பில் 27,948 ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
No plans regarding passenger train now says railway ministry

No plans regarding passenger train now says railway ministry

சட்டவிரோத ஐஆர்சிடிசி இ-பயணசீட்டு முன்பதிவு மோசடி கண்டுபிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஒட்டுமொத்தமாக 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக ரயில் பயணசீட்டுகள் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட பல போலி பயனர் கணக்குகள் (user id) இரயில்வே பாதுகாப்பு படையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பயணசீட்டுகள் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட 16,735 பயனர் கணக்குகள் ஒட்டுமொத்தமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் பயணம் மேற்கொள்ள ரூபாய் 7.96 கோடி மதிப்பில் 27,948 ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் போலி பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ANMS மற்றும் MAC மென்பொருள் ரயில்வே பாதுகாப்பு படையினரால் முற்றிலுமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தி மோசடிகாரர்கள் OTP மற்றும் CAPTCHA ஆகியவற்றுக்கு செல்லாமல் சட்டவிரோதமாக ஐஆர்சிடிசி யின் இ பயணசீட்டுகளை முன்பதிவு செய்து வந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது என ரயில்வே பாதுகப்பு படையின் தலைமை இயக்குநர் அருண் குமார் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

IRCTC Booking: முதல்ல டிரெய்ன் டிக்கெட் பண்ணுங்க, அப்புறம் காசு கொடுக்கலாம் - ஐஆர்சிடிசி-யின் புதிய சேவை

மேலும் ரயில்வே பயணிகளால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ரூபாய் 30 கோடி மதிப்பிலான பழைய பயணச் சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த மோசடி 2012 முதலே இருந்துள்ளது. ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தான் இது மிகவும் தீவிரமடைந்துள்ளது என்று அவர் கூறினார். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்தவர்களுடனம் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்த கைதுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது, மேலும் கைது செய்யப்பட்டவர்களில் இந்த சட்டவிரோத மென்பொருளின் உரிமையாளர்களும் அடக்கம், என அவர் மேலும் கூறினார். ஆனால் இதுவரை எந்த பயண்சீட்டு முகவர்களும் கைது செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ரயில்வே பாதுகாப்பு படையின் தலைமை இயக்குநரின் கூற்றுப்படி ANMS மென்பொருள் கடந்த ஜனவரி 23 ஆம் தேதியும், MAC மென்பொருள் பிப்ரவரி 8 ஆம் தேதியும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 சதவிகித ரயில் முன்பதிவு சந்தை சட்டவிரோத ANMS மென்பொருளால் கைப்பற்றப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை பிற சட்டவிரோத மென்பொருள்களையும் செயலிழக்க செய்ய முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிஸான் கடன் அட்டை : விவசாயிகளுக்கு 3 லட்சம் வரை கடன், 4 சதவிகித வட்டி

ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு முறை பயன்படுத்தும் கடவுசொல் (OTP) முறையையும் இந்த மென்பொருள் பைபாஸ் செய்து வந்துள்ளது விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இணைப்பை க்ளிக் செய்யவும்.
Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment