ஐ. நா- வில் இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு.. பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா!

இம்ரான் கான் பேசி இருப்பது மிரட்டல் தோனியில் உள்ளது., இதுவும் ஒருவிதமான தந்திரம்

By: Updated: September 28, 2019, 03:32:17 PM

Vidisha Maitra, speech : ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதிவு செய்த சர்ச்சை பேச்சுக்கு இந்தியா சார்பில் இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைப்பெற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துக் கொண்டு இந்தியாவை எச்சரிக்கும் வகையிலும் மோடியை குறித்தும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்தார். இம்ரான் கானின் இந்த பேச்சு மிகப் பெரிய சர்ச்சையை எழுப்பி இருந்தது.

கூட்டத்தில் இம்ரான்கான் பேசியதாவது, “ பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்பு இந்தியாவுடன் நல்ல உறவை மேற்கொள்ள நான் பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் இந்தியா அதை விரும்பவில்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைக் கொண்டவை. இரு நாடுகளும் அணு ஆயுதங்களால் மோதிக்கொண்டால் அதனால் மற்ற நாடுகளுக்கு ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர், அங்கு 80 லட்சம் மக்களை இந்தியா சிறை வைத்துள்ளது. காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் உற்று நோக்க வேண்டடியது அவர்களின் கடமை. காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இப்போது நான் அங்கு இருந்திருந்தால் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தியிருப்பேன் .

ஐந்தாயிரம் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பியதாக கூறப்படுகிறது முற்றிலும் பழிப்போடும் ஒரு நோக்கம் மட்டுமே. இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது”  என்று கூறினார்.

இம்ரான்கானின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் ஐ.நா வில் இந்தியா சார்பில் இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பேசினார். அப்போது அவர் இம்ரான் கானிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

விதிஷா மைத்ரா பேசிய முழு விபரம் : “ அணு ஆயுதங்களால் போரிட்டால் அதன் விளைவுகள் என்ன ஆகும் என இம்ரான் கான் பேசி இருப்பது மிரட்டல் தோனியில் உள்ளது.இதுவும் ஒருவிதமான தந்திரம் என்று கூறலாம்.

ஐ.நா.சபை அறிவித்திருக்கும் தீவிரவாதிகளில் 130-க்கும் அதிகமானவர்கள் பாகிஸ்தானில் இருப்பதாக ஐ.நா.சபையில் இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. இதனை இம்ரான் கான் மறுக்க முடியுமா?

பிரதமர் கான் கூறிய அணுசக்தி பேச்சுக்கு சரியான அணுகுமுறை அல்ல. அது வன்முறையை தூண்டும் வகையில் அணுசக்தி பேரழிவை கட்ட அவிழ்துவிடும் நோக்கில் இருக்கிறது. இம்ரான் கானுக்கு இங்கு வரலாற்றை நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நடத்திய இனப்படுகொலை.இம்ரான் கானின் பேச்சு எல்லை மீறியதாகவும் துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

கட்டாய மதமாற்றம் போன்றவற்றால் 1947 ல் 23 சதவீதமாக இருந்த பாகிஸ்தானில் சிறுபான்மையினர் எண்ணிக்கை தற்போது 3 சதவீதமாக சுருங்கி உள்ளதை மறுக்க முடியுமா? பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தியாவின் ஜனநாயகம், காஷ்மீர், லடாக் விவகாரம் ஆகியவற்றில் நடுநிலைத்தன்மை கடைபிடிக்கப்பட்டு வருவதை இம்ரான் கான் அறிய வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Imran khans nuke remark brinkmanship not statesmanship says vidisha maitra first secretary mea

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X