Advertisment

அமைதியை உறுதி செய்ய ரூ. 2 லட்சத்திற்கான பத்திரத்தில் கையெழுத்திட நோட்டீஸ்!

பாக்பத்தில் உள்ள சஞ்சீவ் சௌத்ரி, நிர்வாகம், விவசாய போராட்டத்திற்கு குரல் கொடுத்த 200 நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
அமைதியை உறுதி செய்ய ரூ. 2 லட்சத்திற்கான பத்திரத்தில் கையெழுத்திட நோட்டீஸ்!

 Manish Sahu

Advertisment

In Baghpat, protest leaders get notices to sign Rs 2-lakh bond to ‘ensure peace’ : சம்பா மற்றும் சீதாப்பூர் பகுதிகளை தொடர்ந்து பாக்பத் மாவட்ட நிர்வாகமும், விவசாய போராட்டத்தில் தொடர்புடைய தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அவர்களிடம் அமைதியை உறுதி செய்வதற்கான ரூ. 2 லட்சம் மதிப்பிலான பத்திரங்களில் கையெழுத்திட வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஆர்.எல்.டி. எம்.எல்.ஏ வீர்பல் சிங் ரதி மற்றும் 6 நபர்கள் இப்படியான நோட்டீஸை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பரௌத்தில் நடைபெற்ற மகாபஞ்சாயத்தில் கலந்து கொள்வதற்கு ஒருநாள் முன்பு ஜனவரி 31ம் தேதி அன்று அவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மகா பஞ்சாயத்து இந்த பகுதிகளில் இருந்து விவசாயிகள் காஸிப்பூர் மற்றும் சிங்கு எல்லைகளை அடைந்து போராட்டம் செய்யும் விவசாயிகளோடு இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக வெளியாகியிருக்கும் அமெரிக்காவின் கருத்துகள்

ஜனவரி 30ம் தேதி அன்று எனக்கு இந்த நோட்டீஸ் கிடைத்தது. எனக்கு மட்டும் அல்லாமல் இந்த பகுதியில் உள்ள சுமார் 200 விவசாயிகளுக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது தெரிய வந்தது. இந்த நோட்டீஸ்களை வழங்குவதன் மூலம் நாங்கள் விவசாயிகளுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்திக் கொள்வோம் என்று என்று எதிர்பார்க்கிறது. நானும் என்னுடன் சேர்ந்து 6 விவசாயிகளும் மகா பஞ்சாயத்தில் பங்கேற்றோம். எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது என்று ரதி கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் ராஜ் கமல் யாதவிடம் கேட்ட போது அவருக்கு இது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என்று கூறிவிட்டார். துணைக் கோட்ட ஆட்சியர் துர்கேஷ் மிஷ்ராவின் கையெழுத்து தான் இதில் இடம் பெற்றிருக்கிறது. அவரிடம் கேட்ட போது அவர் அதற்கு பதில் ஏதும் அளிக்கவில்லை.

கூடுதல் மாவட்ட ஆட்சியர் அமித் குமார் கூறுகையில், 107/116 CrPC-ன் கீழ் வருகின்ற பஞ்சாயத்து தேர்தலை கருத்தில் கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்க்க இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றும் இதற்கும் விவசாய போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். நோட்டீஸ் வழங்கும் பணிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது வரை 700 நபர்களுக்கு இப்படி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : மறுக்கப்படும் கழிவறை வசதிகள்; சிரமத்திற்கு ஆளாகும் விவசாயிகள்! 

நிர்வாகம், காவல்துறையினர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அஜய் குமார் ஷர்மா என்ற ஸ்டேஷன் அதிகாரி கூறுகையில், நாங்கள் நிர்வாகத்திடம் வீர்பால் சிங் உட்பட 6 நபர்களுக்கு பத்திரங்களை அனுப்புமாறு கூறினோம். ஏன் என்றால் அவர்கள் பேச்சுகள் மூலம் மக்களை தூண்டிவிட முடியும். அவர்களின் பேச்சினால் போராட்டம் வன்முறையாக மாறலாம் என்று அஞ்சியே இதனை செய்தோம் என்றார்.

வீர்பால் சிங்குக்கு வழங்கப்பட்ட நோட்டீஸில், ரூ .2 லட்சம் மதிப்புள்ள தனிப்பட்ட பத்திரத்தில் கையெழுத்திடவும், "அமைதியைக் காக்க" ஒரு வருடத்திற்கு அதே மதிப்புள்ள தொகையில் இரண்டு ஜாமீன்களை ஒப்படைக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. "நாங்கள் சட்டம் ஒழுங்கை மீறலாம் என்ற அச்சத்தில் நிர்வாகம் இந்த அறிவிப்புகளை வெளியிட்டது. நான் இதுவரை நிர்வாகத்தின் முன் ஆஜராகவில்லை. ஆனால் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான எங்களின் அமைதிப்போராட்டம் தொடரும் என்று பாக்பதில் உள்ள, 2012ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அவர் குறிப்பிட்டார்.

இந்த முன்னாள் எம்.எல்.ஏவை டெல்லி காவல்துறை போனில் அழைத்து, அவருக்கும் டெல்லியில் நடைபெற்ற செங்கோட்டை வன்முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து வாக்குமூலம் வாங்க முயன்றதாக கூறிய அவர், தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. தன்னுடைய பெயர் தவறாக இதில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பாக்பத்தில் உள்ள சஞ்சீவ் சௌத்ரி, நிர்வாகம், விவசாய போராட்டத்திற்கு குரல் கொடுத்த 200 நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏழை விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையிலான பத்திரத்தில், ஜாமீனுடன் கையெழுத்திட கூறியுள்ளது. அதன் மூலம் அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை நிர்வாகம் உறுதி செய்கிறது என்றார் அவர்.  கடந்த மாதம், பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் விவசாயிகளிடம் ரூ. 50 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை ஸ்யூரட்டியுடன் கூடிய கையெழுத்து கேட்டதற்கான விவகாரத்தில் பதில் கோரியது. இது போன்று டிசம்பர் மாதம் சாம்பல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு பரவலாக சீற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Farmers Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment