Advertisment

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பின் எப்படி இருக்கிறார் அருண் ஜெட்லி ?

இன்று மாநிலங்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாதங்கள் கழித்து நாடாளுமன்றம் வருகை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அருண் ஜெட்லி, மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்

அருண் ஜெட்லி 2014ம் ஆண்டு பாஜக தலைமையில் இந்தியாவில் ஆட்சி அமைக்கப்பட்ட காலத்திலிருந்து நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

Advertisment

வெகு நாட்களாக சிறுநீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகி வந்த ஜெட்லிக்கு கடந்த மே மாதம் 14ம் தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவருக்கு அதிக ஓய்வு தேவைப்பட்டதால் விடுப்பில் இருந்தார்.

அவர் விடுப்பில் சென்ற மூன்று மாதங்களில் இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பில் இருந்தவர் பியூஷ் கோயல் ஆவார்.

மூன்று மாத கால ஓய்விற்கு பிறகு  ஜெட்லி அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளாதாலும், நோய் தொற்றுக் காலம் முடிவுற்றதாலும் ஆகஸ்ட்டில் நிதி அமைச்சராக பொறுப்பேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் அருண் ஜெட்லி

மாநிலங்களவ துணைத் தலைவர் குரியன் அவர்களின் பதவி காலம் முடிவுற்ற நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடத்தப்படும் என்று துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்திருந்தார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும்  ஜெட்லி மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று நாடாளுமன்றம் வந்தார். அவர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருவதற்கு முன்பு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மாஸ்க் அணிந்திருந்தார்.

அருண் ஜெட்லி, மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த அருண் ஜெட்லி

வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துகள் தெரிவித்த அருண் ஜெட்லி

தேர்தல் முடிவடைந்த பின்பு தேர்தலில் வெற்றிபெற்றா ஹரிவன்ஷ் நாராயண சிங்கிற்கு வாழ்த்துகள் கூறி உரை ஒன்றினை நிகழ்த்தினார்  ஜெட்லி.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக் கூட்டணி சார்பில் நின்ற ஹரிவன்ஷ் நாராயண சிங் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Arun Jaitley
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment