கடின உழைப்பால் 21-வது நூற்றாண்டை இந்தியாவுக்கு உரித்தாக்குவோம் : ஆசியான் மாநாட்டில் மோடி உரை

கடின உழைப்பின் மூலம் 21-வது நூற்றாண்டை இந்தியாவிற்கானதாக மாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உரை

நாட்டு மக்கள் கடின உழைப்பின் மூலம் 21-வது நூற்றாண்டை இந்தியாவிற்கானதாக மாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பைன்ஸ் மாநாட்டில் உரையாற்றினார். பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் நடைபெறும் ஆசியன் வர்த்தக மற்றும் மூதலீட்டு மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துதல், ஆசியாவின் முன்னேற்றத்திற்கு இணைந்து செயல்படுதல் உள்ளிட்டவை இடம்பெற்றன.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும்போது: மகாத்மா காந்தி வாழ்ந்த இந்தியா என்பதனை அமைதியின் மூலமாக இந்தியா வெளிப்படுத்தி வருகிறது. இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதே தற்போதைய நோக்கம். 21-வது நூற்றாண்டு என்பது ஆசியாவிற்கானது. இதற்காக ஒவ்வொரு இந்தியரும் கடின உழைப்பை வெளிப்படுத்தி இந்த நூற்றாண்டை இந்தியாவிற்கானதாக மாற்ற வேண்டும். முன்னேற்றத்தின் போது வரும் பல தடங்கள்களை தகர்த்து, புதிய நிலையை எட்டிப் பிடிக்க வேண்டும்.

கியாஸ் இணைப்பு பெற வேண்டும் என்பது முந்தைய காலத்தில் சவால் நிறைந்ததாக இருந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் 3.5 கோடி குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பாக எவ்வளவு பணம் ஊழல் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது எவ்வளவு பணம் மீட்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்றார்.

×Close
×Close