Advertisment

கொரோனா இரண்டாம் அலை: ஆக்ஸிஜன் தேவை அதிகம்; இறப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை

கடந்த ஆண்டு கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய செப்டம்பர் மற்றும் அக்டோபர் கால கட்டங்களில் இருந்த தேவையைக் காட்டிலும் 13.4% ஆக்ஸிஜன் தேவை தற்போது அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai Covid19 second wave TN government converts medical college hostels into care centers 296608

 Kaunain Sheriff M

Advertisment

Second Covid wave : திங்கள் கிழமை அன்று மத்திய அரசின் கொரோனா தடுப்பு பிரிவு முதல் அலை மற்றும் இரண்டாம் அலையை ஒப்பிட்டு வெளியிட்ட சில முக்கியமான விசயங்கள் : கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆக்ஸிஜன் தேவை அதிகமாக உள்ளது. இறப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ளது.

சில மாநிலங்களில் ஆக்ஸிஜன் தேவை குறித்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில், டாஸ்க் ஃபோர்ஸ், அனுமதிக்கப்படும் 54.5% நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய செப்டம்பர் மற்றும் அக்டோபர் கால கட்டங்களில் இருந்த தேவையைக் காட்டிலும் 13.4% ஆக்ஸிஜன் தேவை தற்போது அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க : கொரோனா இரண்டாம் அலை எப்படி வித்தியாசமானது?

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 2,73,810 நபர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 1619 நபர்கள் மரணத்தை தழுவியுள்ளனர். நாடு முழுவதும் 19,29,329 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று நரேந்திர மோடி முக்கியமான மருத்துவர்கள் மற்றும் முக்கிய பார்மா நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

மேலும் படிக்க : கொரோனா இரண்டாம் அலை; சென்னை அரசு மருத்துவமனைகளின் நிலை என்ன?

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொரோனா வேகமாக பரவி வருகிறது. மருத்துவர்கள், அந்த பகுதியில் வேலை பார்க்கும் சக மருத்துவர்களை ஆன்லைன் மூலம் அணுகி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர்களிடம் மோடி தெரிவித்தார்.

முதல் அலை மற்றும் இரண்டாம் அலை : ஒரு ஒப்பீடு

கொரோனா தரவுகளுக்கான தேசிய மருத்துவ பதிவேட்டின் படி, இரண்டாம் அலையில் சுவாச பிரச்சனை மிக முக்கியமான, பொதுவான அறிகுறியாக உள்ளது. அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளில் 47.5% நோயாளிகளுக்கு இந்த சுவாச குறைபாடு உள்ளது. கடந்த ஆண்டு இதன் விகிதம் 41.7% ஆக இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

சுவாச குறைபாடு இரண்டாம் அலையில் சற்று அதிகமாக உள்ளது. இறப்பில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. முதல் அலையில் 9.6% ஆக இருந்தது. தற்போது இரண்டாம் அலையில் அது 9.7% ஆக உள்ளது. ஆக்ஸிஜன் தேவை 54.5% ஆக உள்ளது. முதல் அலையின் போது அது 41.1% ஆக இருந்தது என்று ஐ.சி.எம்.ஆர். பொது இயக்குநர் பலராம் பார்கவா குறிப்பிட்டார்.

இரண்டு அலைகளிலும் அதிகம் பாதிக்கப்படும் நபர்கள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இணை நோய்கள் உள்ள காரணத்தால் வயதானவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிப்படையும் அபாயம் அதிகமாக உள்ளது.

In second Covid wave, more need oxygen, death rate almost the same<br />

பல்வேறு செயல்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்த நிலையில் இளைஞர்களும் இந்த நோய் தொற்றுக்கு சற்று அதிகமாக ஆளாகி வருகின்றனர். கடந்த அலையின் போது 0 - 19 வயது வரை பாதிக்கப்படும் நபர்களின் விகிதம் 4.2% ஆக இருந்தது. ஆனால் தற்போது 5.8% ஆக அது உள்ளது. 20 முதல் 39 வயது வரை பாதிக்கப்படும் நபர்களின் விகிதம் 23.7% ஆக உள்ளது. கடந்த முறை அது 25.5% ஆக இருந்தது.

முதல் அலையின் போது 54.9% நபர்களுக்கு ஏதாவது ஒரு இணை நோய் இருக்கும். தற்போது அந்த விகிதம் 48.6% ஆக உள்ளது. நோய் அறிகுறி குறைவாக உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களின் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மத்தியமாக பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் வழிகாட்டு முறைப்படி சிகிச்சை பெற்றால் விரைவில் வீடு திரும்பலாம். தேவையானவர்களுக்கு தர வேண்டிய ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரித்துக் கொள்ள்ளலாம்.

டாஸ்க் ஃபோர்ஸின் தலைவராக இருக்கும் மருத்துவர் வி.கே. பால், மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (Integrated Disease Surveillance Programme (IDSP)) தரவு இரண்டாவது அலைகளில் வயது வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.

பாதிப்பும் வயதும்

கடந்த அலையின் போது 30 வயதிற்கும் குறைந்தவர்கள் மொத்த நோய் பாதிப்பில் 31% -ஆக இருந்தனர். இந்த அலையின் போதும் அது 31% ஆகவே உள்ளது. 30 முதல் 40 வயது வரையிலான பிரிவில் பாதிக்கப்பட்டவர்களின் அளவு இரண்டு பிரிவிலும் 21% ஆகவே உள்ளது. இளைஞர்கள் கோவிட்-பாசிட்டிவ் ஆக அதிக ஆபத்து இல்லை என்பதை இது நிரூபிக்கிறது.

ஒட்டுமொத்தமாக வயது வரம்பில் மாற்றத்தை நாங்கள் காணவில்லை, ”என்று பால் கூறினார். மெக்கானிக்கல் வெண்டிலேட்டசனின் தேவை இரண்டாம் அலையின் போது 27.8% ஆக குறைந்துள்ளது. ஆனால் கடந்த முறை இது 37.3% ஆக இருந்தது.

குறிப்பிடத்தக்க வகையில் இரண்டாம் அலையின் போது 74.5% நோயாளிகள் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் முதலாம் அலையின் போது 87.4% ஆக அது இருந்தது குறிப்பிடத்தக்கது.

தவிர, முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் மருத்துவ அறிகுறிகள் அம்சங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது. வறட்டு இருமல் (5.6% vs 1.5%), வாசனை இழப்பு (7.7% vs 2.2%), சோர்வு (24.2% vs 11.5%), தொண்டை வறட்சி (16 % vs 7.5%), தசைகளில் வலி 14.8% vs 6.3%)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment