வைரல் புகைப்படம் : காவல் துறை விளம்பரத்தில் கண்ணழகி ப்ரியா வாரியர்!

பிரபலங்களின் புகைப்படத்தை வைத்தால் அவர்களை பார்ப்பதற்கால்கவே வாசத்தை என்னவென்று படிப்பார்கள்.

கண்ணழகி ப்ரியா பிரகாஷ் புகைப்படத்தை  போக்குவரத்து காவல் துறையினர்,  சாலை விபத்து குறித்த  விழிப்புணர்வு   விளம்பரத்திற்கு  பயன்படுத்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடந்த  மாதம்   முழுவதும், இண்டர்நெட்,  சோஷியல் மீடியாஸ்,  யூடியூப் என அனைத்திலும் வைரல் நாயகியாக வலம் வந்தவர் தான் ப்ரியா பிரகாஷ் வாரியர். தனது அறிமுக படத்திலேயே ப்ரியா   உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனார்.  அவரின் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களிலும் ரசிகர்களின் காதல் மழை தான்.

அவர் நடிப்பில் வெளிவந்த ’ஒரு அடார் லவ் ’ திரைப்படமும் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. அதில் வரும்  ‘மானிக்க மலராயா பூவி’ பாடலில் ப்ரியா கண்ணடிக்கும் அழகும், துருவத்தை உயர்த்தும் அழகும் அவரை ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வர வைத்தது.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள   வதோதரா மாநகர காவல் துறை ப்ரியா  வாரியரின் புகைப்படத்தை  சாலை விபத்து விழிப்புணர்வு விளம்பரத்தில் பயன்படுத்தி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

“கண் இமைக்கும் நேரத்தில் எதுவும் நடக்கலாம்; எந்த சிதறலும் இல்லாமல் கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள்’ என்ற வாசகத்தின் அருகில் ப்ரியா கண்ணடிக்கும் புகைப்படமும் இடம் பெற்றிருக்கிறது.  இதுக் குறித்து பேசிய  வதோதரா மாநகர காவல் துறையினர்,   இதுப்போன்ற விளம்பரங்களில் மக்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களை பயன்படுத்துவது ஒரு ஆரோக்கியமான செயலேயாகும்,  தினமும் காணும் வாசகம் தானே என்று அதை தவிர்த்து விட்டு செல்பவர்கள் பலர் இருக்கின்றனர். இதுப்போன்ற பிரபலங்களின்  புகைப்படத்தை வைத்தால் அவர்களை பார்ப்பதற்காகவே வாசத்தை என்னவென்று படிப்பார்கள். அதைப் போல் அதை அவ்வளவு எளிதில் மறக்கவும் மாட்டார்கள்” என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாசகத்தை நமது இளைஞர்கள் இரண்டு விதமான அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். பெண்கள் கண் இமைக்கும் நேரக்த்தில் எதுவும் நடக்கவும். எனவே  அவர்களின் சிந்தனைகளை மறந்து விட்டு ரோட்டில்(வாழ்க்கையில்) கவனம் செலுத்த வேண்டும். என்று கூறிவருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close