Advertisment

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி; பரிந்துரைக்கப்பட்ட புதிய நெறிமுறைகள்

28 நாட்களில் இருந்து 6 முதல் 8 வார காலங்களாக இந்த இடைவெளியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மார்ச் மாதத்தில் அறிவித்தது.

author-image
WebDesk
New Update
Increase gap between two doses of Covishield to 12-16 weeks

Increase gap between two doses of Covishield to 12-16 weeks : கோவிஷீல்ட்டின் இரண்டு டோஸ்களுக்கு இடையேயான காலத்தை 12 முதல் 16 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்று தேசிய சோதனை ஆலோசனை குழு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.. ஆனால் கோவாக்ஸினில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

Advertisment

கர்ப்பிணிகளும், மகப்பேறுக்கு பிறகு குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களும் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தற்போது வரை இரு தரப்பினருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி தரப்படவில்லை.

ஆய்வக சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தால் அவர்கள் குணம் அடைந்து ஆறுவாரங்கள் ஆகும் வரையில் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள கூடாது என்றும் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

சுகாதாரத்துறையின் தற்போதைய நெறிமுறைகள்படி கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்து 4 முதல் 8 வாரங்களில் கர்ப்பிணிகள் தங்களின் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளலாம். பாலூட்டும் தாய்மார்களுக்கு இதுவரையில் தடுப்பூசிகள் பரிந்துரை செய்யப்படவில்லை. இந்த பரிந்துரைகள் ஒப்புதலுக்காக தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய நிபுணர்கள் குழுவான NEGVAக்கு அனுப்பப்படும்.

இங்கிலாந்தில் இருந்து கிடைக்கக்கூடிய நிஜ வாழ்க்கை ஆதாரங்களின் அடிப்படையில், கோவிட் -19 பணிக்குழு இரண்டு அளவிலான கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு இடையில் அளவீட்டு இடைவெளியை 12-16 வாரங்களாக அதிகரிக்க ஒப்புக்கொண்டது. கோவாக்சின் தடுப்பூசி அளவுகளின் இடைவெளியில் எந்த மாற்றமும் பரிந்துரைக்கப்படவில்லை.

மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக கோவிஷீல்டிற்கு இடையேயான கால இடைவெளி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 28 நாட்களில் இருந்து 6 முதல் 8 வார காலங்களாக இந்த இடைவெளியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மார்ச் மாதத்தில் அறிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment