Advertisment

72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு!

Happy Independence Day 2018: நினைவிலும், வாழ்விலும் மறந்துவிடக் கூடாத நாளாக பார்க்கப்படும் சுதந்திர தினத்தின் வரலாறு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
72 ஆவது சுதந்திர தினம்:  மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு!

72 ஆவது சுதந்திர தினம் : Happy Independence Day 2018: History, Significance and Importance of 15 August

Advertisment

ஆண்டுந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக  கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சுதந்திர தினத்தை வரலாற்றாக மாற்ற தலைவர்களும், தியாகிகளும் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.

இருகை தட்டினால் தான் ஓசை என்பார்கள். அது போல் ஒருவர் மட்டுமே சுதந்திரம் என்று கத்தினால் அது உளறல். ஓட்டு மொத்த மக்களும் நின்று சுதந்திரம் என்று கத்தினால் அது கோஷம். ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும், வாழ்விலும் மறந்துவிடக் கூடாத நாளாக பார்க்கப்படும் சுதந்திர தினத்தின் வரலாறு சுருக்கமாக உங்கள் பார்வைக்கு..

நமது தாய்மண்ணில் பிறந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் விரும்பிய நமது தேசிய தலைவர்களையும், போராட்ட வீரர்களையும் அவ்வளவு எளிதாக மறந்து விடக் கூடாது.

சுதந்திர வரலாறு :

இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி அதிகமாக அதிகமாக,தலைவர்கள் துணிச்சலுடனும் வீரர்கள் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டனர்.

‘1857 இந்திய கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷாபர் உருவாக்கினர். இதுவே, ‘முதல் இந்தியப் போர்’ என்று அழைக்கப்பட்டது. ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.

publive-image 15 August Independence Day 2018:

ஆங்கிலேயர்கள் ஒருபுறம் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே இருந்தாலும், அதை நினைத்து  நமது இந்தியர்கள் அஞ்சி நடுங்கவில்லை.‘முதல் இந்தியப் போரைத்’ தொடர்ந்து, பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர்.

1867ல் ‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர்.

1905ல், ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்சியை கொண்டு வந்தனர். இதைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  பால கங்காதர திலகர் முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார்,

இதன்காரணமாக , தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் 1907 ஆம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக  பிரிந்தது. 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் இந்தியாவிற்கு வந்தார். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்தார்.

1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். அந்த நாள் நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் மற்றும்  ஒரு புதிய புரட்சியின் தொடக்க நாள்  என்று சொன்னால் அது மிகையாகாது.

1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். 1919ல் நடந்த திட்டமிட்ட படுகொலையான  ஜாலியன் வாலாபாக் சம்பவம் இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது.

1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி முதல் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கினார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பின்பு இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார்.

அமைதியால் மட்டும் தான் சுதந்திரம் அடைய முடியும் என்பதில் உறுதியாக இருந்த காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது.

அதற்கு அடுத்து லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக  காந்தி கலந்துகொண்டார் . இந்த மாநாடும் தோல்வியடைந்தது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலயர்கள் இந்தியர்களை கொத்தடிமையாக்க துடித்தனர்.

1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.

இந்த அனைத்து போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி போல் 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன்  ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது.

publive-image 15 August Independence Day 2018: நேருவின் முதல் உரை

சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர்.  ஆகஸ்ட் 15 ஆம் நாள் வரலாறாக மாறிய அந்த நாளை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது.  சுதந்திர காற்றை சுவாசிக்க  எத்தனையோ தலைவர்களின்  உயிர்கள் மண்ணில் புதைந்தன. சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே  அவர்கள் செய்த தியாகங்களை என்றுமே மறந்து விடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கும் இதை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment