Advertisment

72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி உரை “யூடியூப்” நேரலை

PM Narendra Modi Independence Day Speech: பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி பேசும் நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Independence Day Speech, PM Narendra Modi Independence Day Speech, Where and how to watch PM Modi’s speech, flag hoisting ceremony at Red Fort

PM Narendra Modi 15 August Speech: பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை

PM Modi Independence Day Speech: பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை, செங்கோட்டையில் கொடியேற்ற நிகழ்ச்சி ஆகியவற்றை பார்க்கலாம்... எங்கே? எப்படி?

Advertisment

72nd Independence Day: இந்தியாவின் 72-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தலைநகர் டெல்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 5-வது சுதந்திர தின உரையை நிகழ்த்துகிறார்.

டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு அம்சமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் செவ்வாய்கிழமை காலை முதல் புதன்கிழமை பிற்பகல் 2 மணி வரை வாகனங்களுக்கு ‘பார்க்கிங்’ வசதி கிடையாது. எனினும் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் சென்று வர எந்தத் தடையும் இல்லை.

 72 independence day of India 2018,  Where and how to watch PM Modi’s speech? சுதந்திர தின கொண்டாட்டத்தை ‘லைவ்’வாக எங்கே, எப்படி பார்ப்பது?

பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி பேசும் நிகழ்வுகளை புதன்கிழமை (ஆகஸ்ட் 15) காலை 6:35 மணி முதல் தூர்தர்ஷன் தேசிய அலைவரிசையில் நேரடி ஒளிபரப்பாக காணலாம். தூர்தர்ஷன் ‘யு டியூப்’ சேனலும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தை ‘லைவ்’ செய்கிறது.

தூர்தர்ஷனின் தேசிய அலைவரிசையுடன் கடந்த 2013-ல் தேசிய கொண்டாட்டங்களை நேரடி ஓளிபரப்பு செய்ய ‘யு டியூப்’ ஒப்பந்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ‘தூர்தர்ஷன் - யு டியூப் ஒத்துழைப்பு மூலமாக உலகம் முழுவதும் உள்ள பல லட்சம் இந்தியர்கள் யூ டியூப் சேனலில் மிக துல்லியமாக சுதந்திர தின கொண்டாட்ட காட்சிகளை காணலாம்.’ என யு டியூப் தெரிவித்திருக்கிறது.

தொடங்கியது நரேந்திர மோடியின் உரை

இன்று காலை  செங்கோட்டையில் தேசியக் கொடியினை ஏற்றி மக்களுக்கான உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.

ஓபிசி, எஸ்.சி-எஸ்.டி கமிஷன்களுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கொடுத்து, தலித்கள் மற்றும் பிற்பட்ட வகுப்பினர் மேம்பாட்டுக்கு தனது அரசு பணியாற்றி வருவதாக மோடி குறிப்பிட்டார்.

அவருடைய உரையின் தமிழாக்கத்தைப் படிக்க 

Narendra Modi Independence Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment