Advertisment

நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று; புதிய உச்சத்தில் இந்தியா

கட்டுப்பாட்டு மையங்களை நிர்வகித்தல் மற்றும் நோய் தொற்று ஏற்பட்டிருப்பவர்களை தடம் அறிய சமூக பணியாற்ற தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் .

author-image
WebDesk
New Update
நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று; புதிய உச்சத்தில் இந்தியா

 Amitabh Sinha , Kaunain Sheriff M

Advertisment

India breaches 1-lakh daily mark, weekends shut in Maharashtra : இந்தியாவில் ஞாயிற்று கிழமை அன்று 1 லட்சத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று பதிவு செய்யப்பட்டது. அதில் 57 ஆயிரம் நபர்கள் மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர்கள். அம்மாநிலத்தில் தற்போது வார இறுதிகளில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி நாட்டில் நாள் ஒன்றுக்கு பதிவான மிக அதிமகான தொற்று எண்ணிக்கையான 1.01 லட்சத்தை இந்தியா அடைந்துள்ளது. ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தங்களின் தரவுகளை மறுநாள் காலையிலேயே வெளியிடுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி அன்று 97,894 பேருக்கு கொரோனா என்பதே உச்சமாக இருந்தது. அதன் பின்னர் இரண்டாம் அலை உருவாவதற்கு இடையேயான 5 மாதங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தது.

1 லட்சம் என்ற எண்ணிக்கையை அடைந்த அதே நாளில் நரேந்திர மோடி மறு ஆய்வு கூட்டம் நடத்தி, கடந்த 2 வாரங்களில் மிகவும் மோசமான பாதிப்பை அடைந்த மகாராஷ்ட்ரா, பஞ்சாப், மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்ட குழுக்களை அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.

ஞாயிற்று கிழமை அன்று மகாராஷ்ட்ரா 57,074 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் மற்ற மாநிலங்களில் 12000-த்திற்கும் மேல் வழக்குகள் பதிவாகவில்லை. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் புனே மற்றும் மும்பையில் முறையே 12,472 மற்றும் 11,206 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பார்க்கையில் எந்த ஒரு நகரத்திலும் 8500க்கும் மேற்பட்டு வழக்குகள் பதிவாகவில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடர்ச்சியாக இரண்டாம் நாளாக 5000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. பஞ்சாப் மீண்டும் 3000த்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுகளை பதிவு செய்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி. மாநிலங்கள் 4000 என்ற வட்டத்திற்குள் வந்துள்ளன. கர்நாடகா மாநிலமும் நீண்ட நாட்கள் கழித்து 4000 என்ற புதிய தொற்று எண்ணிக்கையை அடைந்துள்ளது. அனைத்து பெரு நகரங்களிலும் நோய் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை எண்ணிக்கையுடன் சேர்த்து 1.25 கோடி நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்ட்ராவில் மட்டும் 4.3 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் 490 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 235 நபர்கள் மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர்கள். உ.பி. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நான்கு மாதங்களில் இல்லாத அளவு ஞாயிற்றுக்கிழமை 31 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் முறையே 51 மற்றும் 36 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், பிரதமர் மோடி, எழுச்சியைக் கட்டுப்படுத்த ஐந்து மடங்கு மிகுந்த தீவிரத்துடன் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் கோவிட்-பொருத்தமான நடத்தைக்கான ஒரு சிறப்பு பிரச்சாரத்தின் வெளியீடு மற்றும் தினசரி தடுப்பூசி பகுப்பாய்வு உட்பட பல முக்கிய நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

மோடி, கூட்டத்தின் போது, மகாராஷ்ட்ரா மொத்த கொரோனா தொற்றில் 57%-மும், கடந்த 14 நாட்களில் ஏற்பட்ட இறப்பில் 47%-த்தையும் கொண்டுள்ளது என்று கூறினார். பஞ்சாபில் பாதிப்பு விகிதம் 14 நாட்களில் 4.5%ஆகவும், இறப்பு விகிதம் 16.3% ஆகவும், சத்தீஸ்கரில் தொற்று விகிதம் மற்றும் இறப்பு விகிதம் முறையே 4,3%மும் 7%மும் பதிவாகியுள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, சத்தீஸ்கர், கேரளா, மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் 76% இங்கு தான் ஏற்பட்டது.

சோதனை, தடமறிதல், சிகிச்சை, கோவிட்-பொருத்த நடவடிக்கை மற்றும் தடுப்பூசி போன்ற ஐந்து யுத்திகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். "கடந்த 15 மாதங்களில் நாட்டில் கோவிட் -19 நிர்வாகத்தின் கூட்டு ஆதாயங்கள் வீணடிக்கப்படாமல் இருக்க, அதிக நோய் தொற்று ஏற்படும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் மிஷன்-மோட் அணுகுமுறையைத் தொடர பிரதமர் உத்தரவிட்டார்" என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

கொரோனா தொற்று அதிகரிக்க காரணங்களாக முகக்கவசங்கள் அணியாதது, தொற்றுநோய் கால சோர்வு மற்றும் பரவல் மண்டலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தொய்வு தான் என்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவல் இன்னும் ஊகமாகவே உள்ளது என்பதையும் மோடி அடிக்கோடிட்டு காட்டியது பிரதமர் அலுவலகம். கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. எனவே COVID-19 நிர்வாகத்திற்கான பல்வேறு நெறிமுறைகளை செயல்படுத்துவது அந்த பகுதிகளில் மிகவும் முக்கியமானதாகும்” என்பதை பிரதமர் அலுவலகம் தெளிவுப்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டு மையங்களை நிர்வகித்தல் மற்றும் நோய் தொற்று ஏற்பட்டிருப்பவர்களை தடம் அறிய சமூக பணியாற்ற தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார். 100% முகமூடி பயன்பாடு, பொது சுகாதாரம், பணியிடங்கள் மற்றும் சுகாதார வசதிகளில் தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோவிட் பொருத்தமான நடத்தைக்கான ( Covid appropriate behaviour) சிறப்பு பிரச்சாரம் ஏப்ரல் 6-14 முதல் ஏற்பாடு செய்யப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இறப்பு விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வர மோடி செயற்கை சுவாச வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் தேவை மற்றும் வீட்டில் இருந்தும் மருத்துவமனைகளில் இருந்தும் மருத்துவ வசதிகளை மக்கள் பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று மோடி கூறினார். தொற்று ஏற்பட்டு வரும் பகுதிகளில் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்து தினசரி மதிப்பீட்டினை பகிர வேண்டும் என்றும் மோடி பரிந்துரை செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment