லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லேவுக்கு புறப்படுகிறார். அவருடன் பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நாரவனே ஆகியோர் உள்ளனர். அவர் இன்று லடாக் பகுதியிலும் மற்றும் நாளை ஸ்ரீநகர் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இந்திய ராணுவத்தின் 14ம் படை கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங், தெற்கு ஜிங்ஹியாங் பகுதி கமாண்டர் மேஜர் ஜெனரல் லியூ லின்றிற்கும் இடையே கிட்டத்தட்ட 15 மணிநேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ளுதல், பேங்கோங் சோ பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன
இதுதொடர்பாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த பாதுகாப்புப்படையின் மூத்த அதிகாரி கூறியதாவது, சீனா, முதலில் பேங்கோங் சோ விவகாரம் குறித்து பேச முன்வரவில்லை. இந்தியா தரப்பிலிருந்து முனை 4 மற்றும் 8 குறித்து விவாதிக்கப்படாது என்ற உறுதிக்குப்பின்னரே, சீனா, பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது. இதனையடுத்தே, பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இந்த விவகாரத்தில், முன்னேற்றம் ஏற்பட்டுற்ளதாக அவர் கூறினார்.
பேங்கோங் சோ பகுதியில், சீனப்படைகள் 8வது முனையின் மேற்குபகுதியில் இந்திய பகுதியில் சுமார் 8 கிமீ உள்வந்து அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக, சீனப்படைகள் முனை 4 பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர், இருந்தபோதிலும், அவர்களது ஆக்கிரமிப்புகள் அங்கு தொடர்ந்து வருகிறது.
சீன தலைநகர் பீஜிங்கில், பத்திரிகையாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியதாவது, எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி விவகாரம் தொடர்பாக, சீனா – இந்தியா நாடுகளின் கமாண்டர் அளவிலான அதிகாரிகளின் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை, ஜூலை 14ம் தேதி நடைபெற்றது. நடந்துமுடிந்த 3 கட்ட பேச்சுவார்த்தைகளில், எல்லைப பகுதியில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், எல்லைப்பகுதியில் பதற்றத்தை தணிக்க இருநாட்டு படைகளும், அப்பகுதியிலிருந்து விலக்கிக்கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில் சீனா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்து எல்லையில் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஜீலை 15ம் தேதி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, ராணுவ தளபதி ஜெனரல் நாராவணே சந்தித்துப்பேசியுள்ளார்.
சுசுல் பகுதியில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை குறித்து இருநாட்டு ராணுவம் தரப்பில், எவ்வித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அந்நாட்டின் உயர் அமைப்புகள் ஆய்வு பேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சீனா ஸ்டடி குரூப்பில், பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இருநாடுகளுக்கிடையே, நடந்த கமாண்டிங் அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் குறித்து இந்த குழுவில் விவாதிக்கப்பட்டது.
எல்லைப்பகுதியில் படைக்குறைப்பு விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய விவகாரங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை (17ம் தேதி) லடாக்கிற்கு சென்று, அங்கு படைவீர்ர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். லே பகுதியில் உள்ள 14வது படையின் தலைமையகத்தில் விரிவான ஆய்வுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். 18ம் தேதி, அவர் ஜம்மு காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ளார்.
ராஜ்நாத் சிங், இம்மாதம் 3ம் தேதியே லடாக்கிற்கு செல்ல இருந்த நிலையில், பிரதமர் மோடி அங்கு சென்றதால், இவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தியா – சீனா நாடுகளின் கமாண்டிங் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை, ஜூலை 13ம் தேதி காலை 11 மணிக்கு துவங்கி, 15ம் தேதி அதிகாலை 2 மணிவரை நீடித்தது.
தெப்சாங் சமவெளிப்பகுதியில் இந்தியப்படையினரின் ரோந்து நடவடிக்கைகளை, சீனா தடுத்துவருவது குறித்து, இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.
தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில், இந்திய படையினரின் ரோந்து நடவடிக்கைகள் குறித்து, அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படையை மேம்படுத்த ரூ.300 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:India china border dispute corps commanders meet india china corps commanders meet
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?