Advertisment

முழுமையான படை விலகல் இல்லை: நீண்ட போராட்டத்திற்குத் தயாராகும் இந்திய ராணுவம்

ஒவ்வொரு சிப்பாயும்  அண்டை நாட்டு எதிரி, வானிலை, சொந்த ஆரோக்கியம் என மூன்று கூறுகளில் போராடுகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india china, india china border, இந்தியா- சீனா , india china ladakh, india china border face off, india-china, border faceoff, india- china faceoff, rajnath singh, rajnath singh visits lakadh, rajnath singh on border tensions,

Krishn Kaushik

Advertisment

இந்தியா- சீனா எல்லைக் கட்டுப்பாட்டுப்பாட்டு பகுதியில் அடுத்தக்கட்ட படை விலகல் குறித்த உடன்பாடு எட்டப்படாத நிலையில், இந்தியா ராணுவம் நீண்ட நெடிய  பயணத்திற்கு தயாராகத் தொடங்கியுள்ளது.

பிஎல்ஏவின் கமாண்டர்கள், இந்திய இராணுவத்தினர் இடையேயான நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்புக் கூட்டம் இந்திய எல்லைப் பகுதியான சூஷுலில் ஜுலை 14 அன்று நடைபெற்றது. சர்ச்சைக்குரிய நான்கு எல்லை மோதல் பகுதிகளில், இரண்டில் முழுமையான படை விலகலை இந்த பேச்சுவார்த்தை உறுதி செய்தது. இருப்பினும்,  அடுத்த சுற்று பேச்சுவார்த்தை குறித்து நிச்சயமற்ற தன்மை நிகழ்வதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பேச்சுவார்த்தைக்குப் பின், பேட்ரோலிங் பாய்ண்ட் 14 (கல்வான்), பேட்ரோலிங் பாய்ண்ட் 15 பகுதிகளில் இருந்து  இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் பின் வாங்கினர்.  இருப்பினும், பேட்ரோலிங் பாய்ண்ட்  17-ஏ  இருநாடுகளை சேர்ந்த தலா 50 துருப்புக்கள் , 1 கி.மீ இடைவெளியில்  நிறுத்தப்பட்டுள்ளன.

மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த பங்கோங் த்சோ ஏரியில்,  ஃபிங்கர்  5 வரை சீனப் படைகள் விலக்கி கொள்ளப்பட்டாலும், ஃபிங்கர் 4 ரிட்ஜ் கோடுகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஃபிங்கர் 4 முதல் ஃபிங்கர் 8 இடையில் 8 கி.மீ நீளத்தில் கணிசமான கட்டமைப்புகளை சீன துருப்புக்கள் உருவாக்கியுள்ளன. இந்தியா, தனது எல்லைக் கட்டுபாட்டு கோடு  ஃபிங்கர் 8 நெடுகே செல்வதாக தெரிவித்து வருகிறது.

இந்தியா மற்றும் சீனா இராணுவத்திற்கு இடையிலான  புரிந்துணர்வின் படி, சர்ச்சைக்குரிய நான்கு எல்லைப்  பகுதிகளிலும், இரு நாட்டுப் படைகள் ரோந்து பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது . சீன துருப்புகள் ஊடுருவல் நடத்திய மே மாதத்திற்கு முந்தைய நிலைக்கு திரும்ப இந்தியா விரும்புகிறது.

டெப்சாங் சமவெளியில், இரு நாட்டு துருப்புகள் இடையே நேரடி மோதல் நிலை இல்லையென்றாலும், இப்பகுதியில் இந்தியாவின் வழக்கமான ரோந்து பணிகளை சீனா தடுத்துள்ளது.

குளிர்காலம் முழுவதும் எல்லைப் பகுதியில் கூடுதல் படையினரை தக்கவைத்துக் கொள்வதற்கு, "குளிர்காலத்திற்கான முன்கூட்டிய சேமிப்பிற்கான பணிகள் இரு மடங்காக அதிகரிக்கும் என்று இராணுவத்தின்  உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போக்குவரத்து சிரமங்களைத் தாண்டி, பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

வரப்போகும் பிரச்சனை குறித்து குளிர்காலத்திற்கு முன்பே நாம் அறிந்திருப்பதினால், இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்க முடியாது என்று  முன்னாள் வடக்கு பிராந்திய தளபதியான லெப்டினென்ட் ஜெனரல் தேவ்ராஜ் அன்பு தெரிவித்தார்.

“நவம்பர் வரை உங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. கூடுதல் ஆதாரங்களை நம்மால் ஒருங்கிணைக்க முடியும். உதாரணமாக அக்டோபரில் இந்த நெருக்கடி ஏற்பட்டிருந்தால் ..... மிகவும் சிக்கலானதாக அமைந்திருக்கும்"என்று  கூறினார்.

2011 மற்றும் 2013 க்கு இடையில் XIV படைப்பிரிவின்  தளவாடப் பிரிவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏபி சிங் கூறுகையில்: “ மிகப்பெரிய பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும். சீனாவுக்கு நிகரான படைக்குவிப்பு என்ற வேட்கை ஒரு அபாயமான போக்கில் கொண்டு செல்லும். தேசத்தின்  பொருளாதாரம் பலவீனமடையும்” என்று தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கின் உயரமான நிலப்பரப்பில்" ஒவ்வொரு சிப்பாயும்  அண்டை நாட்டு எதிரி, வானிலை, சொந்த ஆரோக்கியம் என மூன்று கூறுகளில் போராடுகிறார்கள்"என்றும்  கூறினார்.

டெப்சாங் சமவெளி, கால்வான் பள்ளத்தாக்கு,  கோக்ரா போஸ்ட் அனைத்தும் 15,000 அடி உயரத்திற்கு மேல் உள்ளதால்,  படையினருக்கு சிறப்பு பாதுக்காப்பு கருவிகள் தேவைப்படும். ராணுவ உபகரணங்களின் தேவை இரட்டிப்பாகும். சோஜி லா, ரோஹ்தாங் பாஸ் வழியாக செல்லும் பாதைகள்  நவம்பருக்குள் மூடப்படுவதால், போதுமான நேரம் இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment