Advertisment

18 மாநிலங்களில் இரட்டை உருமாறிய கொரோனா: தேவைக்கு ஏற்ப பொது முடக்கத்திற்கு அனுமதி

Corana Increase In India: இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த அனுமதி

author-image
WebDesk
New Update
18 மாநிலங்களில் இரட்டை உருமாறிய கொரோனா: தேவைக்கு ஏற்ப பொது முடக்கத்திற்கு அனுமதி

New Covid Double Mutant Variant In India : இந்தியாவில் இரட்டை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தேவையான பகுதிகளில் ஊரடங்கை அறிவிக்க மத்திய அரசு மாநில அரசுக்கு அனுமதி அறித்துள்ளது.

Advertisment

சீனாவில் கடந்த 2019-ம் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதுவரை உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 13 கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா தடுப்பூசி காரணமாக வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.  ஆனால் கடந்த இரு மாதங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இதனால் தற்போது மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவில் தற்போது 18 மாநிலங்களில் இரட்டை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே கண்டறியப்பட்டு வந்த இந்த மாறுபட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் இந்த இரட்டை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டாலும்,  இந்த தொற்று விரைவாக அதிகரிக்குமா என்பது குறித்து விளக்க போதுமான எண்ணிக்கையில் கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பாக ஜெனோமிக் சீக்வென்சிங் மற்றும் தொற்றுநோயியல் ஆய்வகம் தொடர்ந்து நிலைமையை ஆராய்ந்து வருகின்றன ”என்று சுகாதாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உருமாறிய இரட்டை கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், 10787 நேர்மறை மாதிரிகள் பரிசோதனை செய்ததில், 771 மாறுபாடுகள் (VOC) கண்டறியப்பட்டுள்ளன. இதில் இங்கிலாந்தில் 736 மாதிரிகளும், தென்னாப்பிரிக்க வைரஸ்களுக்கு 34 மாதிரிகளுக்கும், பிரேசிலிய 1 மாதிரி இணையானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ்தொற்று மாதிரிகள் நாட்டின் 18 மாநிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் புதன்கிழமை (இன்று) 47,262 புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 275 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இறப்பு எண்ணிக்கை 132 நாட்களில் பின் அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 14 வது நாளாக அதிகரித்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 3.6 லட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல மாநிலங்கள் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டாவது அலை வீசி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களின் அரசாங்கங்கள் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே சில மாநிலங்களில், கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்துள்ள நிலையில், தற்போது கொரோனா தொற்றை குறைக்கும் வகையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் பரிசீலித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு கடந்த ஆண்டு இதே தினத்தில் அறிவிக்கப்பட்டது. சுமார் 525 கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டபோது இந்தியா கடுமையான ஊரடங்கை அறிவித்த்து. ஆனால் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி 2020 மார்ச் 15 அன்று 100 இருந்த பாதிப்பு எண்ணிக்கை, மார்ச் 29 அன்று 1,000 ஆக கடந்த்து குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment