Advertisment

2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் 25 லட்சம் பேர் பதிவு

Covid - 19 vaccination Phase 2 tamil news: நேற்று காலை புது டெல்லியில் உள்ள எய்ம்ஸில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலில் செலுத்திக்கொண்டார்.

author-image
WebDesk
New Update
India news in tamil Covid - 19 vaccination Phase 2: 25 lakh registers for vaccinations in india

Covid - 19 vaccination Phase 2: 25 lakh registers.

India news in tamil:  இரண்டாவது கட்டமாக கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று திங்கள் கிழமை முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் குறிப்பிட் நோய் தொற்று நிலைமைகளுடன் இல்லலத்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்காக முதல் நாளிலே கோ-வின் இணைய பக்கத்தில்  சுமார் 25 லட்சம் பயனாளிகள் பதிவு செய்தனர். நேற்று மாலை வெளியாகிய தகவலின் படி, 1.46 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசியை சுமார் 1.43 கோடி சுகாதார பணியாளர்கள் செலுத்திக்கொண்டனர்.

Advertisment

இதற்கிடையில், நேற்று காலை புது டெல்லியில் உள்ள எய்ம்ஸில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலில் செலுத்திக்கொண்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

"எய்ம்ஸில் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன். கோவிட் -19 - க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த நம்முடைய மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். நாம் அனைவரும் இணைத்து கோவிட் -19 தொற்று இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்என்று பதிவிட்டுள்ளார். 

முதல் நாள் கோ-வின் இணைய பக்கத்தில் பதிவுசெய்த 25 லட்சம் பயனாளிகளில், 24.5 லட்சம் பேர் இரு முன்னுரிமை குழுக்களில் இருந்து வந்தவர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் சுகாதார ஊழியர்கள் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. "சுமார் 6.44 லட்சம் முன்பதிவு  (பதிவுசெய்தவர்களிடமிருந்து) இன்று பயனாளிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட 1.28 லட்சம் பயனாளிகளும், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 18,850 பயனாளிகளும் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. 

கோ-வின் இணைய பக்கம், மற்றும் ஆரோக்யா சேது செயலி ஆகியற்றின் மூலம் சுய பதிவு செய்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம். மற்றும் சில தடுப்பூசி வழங்கும் மையங்களில் முன்பதிவு செய்ய தேவை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

"நேற்று திங்கள்கிழமை இரவு 7 மணி வரை சுமார் 4,27,072 தடுப்பூசி மருந்துகள்  வழங்கப்பட்டது. அவற்றில்  முதல் டோஸ் பெற்ற பயனாளிகள் 3,25,485 பேர் ஆவர். மற்றும் 1,01,587 சுகாதாரப் பணியாளர்கள் தங்களது 2வது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்குக் கொண்டனர்என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கிய முதல் நாளிலே நாட்டின் பிரதமர் தனது முதல் டோஸை செலுத்திக்கொண்டார். இதன் மூலம்  தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக பொதுமக்களிடம் இருந்த தயக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் என்று பிரதமர் எப்போதும் எங்களிடம் கூறுவார். 

2வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கான தடுப்பூசியை திட்டத்தை நேற்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.  இந்தியாவிலே தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை, முதன்முதலில் பிரதமர் எடுத்துக்கொண்டார். இந்த தடுப்பூசிகள் குறித்து எந்தவிதமான வதந்திகளும் தவறான தகவல்களும் இருக்கக்கூடாது என்று அவர் நாட்டிற்கு ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளார். தடுப்பூசி பற்றிய தயக்கம் இனி யாருக்கும் இருக்காதுஎன்று ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியைத் தொடர்ந்து, துணை குடியரசு தலைவர் எம்.வெங்கையா நாயுடு கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். “சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் எனது முதல் டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை இன்று எடுத்துக்கொண்டேன். நான் 28 நாட்களுக்குப் பிறகு 2 வது கோவிட் -19 தடுப்பூசி டோஸ் எடுப்பேன். தகுதிவாய்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும். அதோடு நாவல் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறும் கேட்டுக்கொள்கிறேன்என்று வெங்கையா நாயுடு தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மாநில வெளியுறவு அமைச்சர் (பி.எம்.) ஜிதேந்திர சிங் மற்றும் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றனர்.

தடுப்பூசி வழங்கப்பட்ட 45 வது நாளில், மொத்தம் 1.47 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. “இவர்களில் முதலாவது டோஸ் எடுத்தவர்கள் 66,95,665 பேர் (சுகாதர பணியாளர்கள்) மற்றும் 2 வது டோஸ் எடுத்தவர்கள்  25,57,837 பேர் (சுகாதர பணியாளர்கள்) , 53,27,587 பேர் முன்களப்பணியாளர்கள்  (1 வது டோஸ்), 60 வயதுக்கு மேற்பட்ட 1,28,630 பயனாளிகள் மற்றும் 18,850 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனாளிகள் குறிப்பிட்ட நோயுற்ற தன்மைகளுடன் உள்ளவர்கள்என்று மத்திய சுகாதார  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Covid 19 Vaccine Pm Modi Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment