Advertisment

'அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' - பியூஸ் கோயல்

Piyush Goyal asks officials to keep eye on price of essentials Tamil News: அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறித்து “கண்டிப்பாக கண்காணிக்க” வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
India news in tamil: Piyush Goyal asks officials to keep eye on price of essentials

India news in tamil: சமீபத்திய நாட்களில், சமையல் எண்ணெய்கள் உட்பட துவரம் பருப்பு, சிறு பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விலைகள் உயர்ந்து காணப்பட்டது. நுகர்வோர் விவகார திணைக்களத்தின் போர்ட்டலின் தகவல்களின்படி, டெல்லியில் துவரம் மற்றும் சிறு பருப்பு விலை ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு 108 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அது மே 17 அன்று ஒரு கிலோவுக்கு ரூ .117 ஆக உயர்ந்தது. உளுந்தம் பருப்பின் விலை ஏப்ரல் 17 அன்று ஒரு கிலோவிற்கு 115 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் மே 17 அன்று 120 ஆக உயர்ந்துள்ளது என்று காட்டுகிறது.

Advertisment

இதனையடுத்து, இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள், பருப்பு வகைகளை "வெளிப்படுத்த" மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்துள்ள நடவடிக்கையை நுகர்வோர் விவகார செயலாளர் லீனா நந்தன் மறுஆய்வு செய்தனர்.

இதற்கிடையில், மே 14 அன்று, திணைக்கள நுகர்வோர் விவகாரங்கள் அமைப்பினர் அனைத்து மாநிலங்களுக்கும், யூ.டி.க்களுக்கும் கடிதம் எழுதியிருந்தன. அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 இன் கீழ் "அதிகாரத்தைப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டன. மேலும் வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள் போன்ற அனைத்து பங்குதாரர்களையும் பருப்பு வகைகளின் பங்குகளை அறிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளை நுகர்வோர் துறை அதிகாரிகளோடு மறுஆய்வு செய்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அசாதாரண விலை அதிர்ச்சிகளைத் தணிக்கவும், விலைகளை சீராக வைத்திருக்கவும் பொருட்களின் போதுமான அளவு பராமரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தெரிவித்திருந்தார். அதோடு அத்தியாவசியப் பொருட்களின் பதுக்கலை சரிபார்க்க 1955 அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

"உணவு கொள்முதல் செய்வோர், மொத்த விற்பனையாளர் அல்லது சில்லறை விற்பனையாளர் போன்றவர்கள் கோவிட் சூழ்நிலையை தேவையற்ற முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தால், மாநிலங்களால் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்" என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Central Government Food Covid 19 In India Union Minister Piyush Goyal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment