Advertisment

இந்தியா பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு காரணமாக அமையும் குருநானக்கின் 550வது பிறந்தநாள்

காரதார்பூர் காரிடருக்கு செல்ல செப்டம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்குவதற்கான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India Pakistan bilateral ties Kartarpur Corridor opening talks

India Pakistan bilateral ties Kartarpur Corridor opening talks

India Pakistan bilateral ties Kartarpur Corridor opening talks : புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவுகள் ஒன்றும் சிறப்புற இல்லாத் நேரத்தில், காஷ்மீர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் இரு தரப்பிலும் அமைதிக்கான பேச்சுவார்த்தை நீள்வதற்கு பதிலாக பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. ஒரே நாளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான உறவில் ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கும் வகையில் இஸ்லமாபாத்தில் இருந்து தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

Advertisment

ஒரு பக்கம், அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. மறுபுறமோ, குருநானக்கின் 550வது பிறந்தநாளுக்காக, சீக்கிய மக்களின் புனித தளமான காரதார்பூர் காரிடருக்கு செல்ல செப்டம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தை இன்று ஏற்பாடு செய்துள்ளது. மேலும் குல்புஷான் ஜாதவை சந்திப்பதற்கு அனுமதியையும் வழங்கியுள்ளது.

India Pakistan bilateral ties Kartarpur Corridor opening talks

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மேற்கொண்ட விசயங்கள் குறித்து டெல்லியிலோ “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலைமை தேவையற்ற அறிக்கைகளையும், கருத்துகளையும் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் “பாகிஸ்தானின் இது போன்ற தேவையற்ற அறிக்கைகள் மறைமுகமாக ஜிஹாத் போன்ற தீவிரவாத அமைப்புகளை தூண்டிவிடுவது போன்று இருக்கிறது. இது தேவையற்ற பின்விளைவுகளை தான் உருவாக்கும்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கூற்றுகளை ஒரு போதும் உலக அரங்கம் அங்கீகரிக்காது. ஏன் என்றால் இதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி உண்மைக்கு புறம்பான பொய்யான, உறுதி செய்யப்படாத தகவல்களையே வெளியிடும் என்பதை உலக நாடுகள் கண்டுள்ளது. அதை பாகிஸ்தான் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து, பாகிஸ்தானின் மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷிரீன் மஜாரி ஐ.நாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அதைப்பற்றி தேவையில்லாமல் ஏன் பேச வேண்டும். அதில் இருக்கும் தகவல்கள், ஒரு காகிதத்திற்கும் கூட மதிப்பற்றது என்றும் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவுவது குறித்து கேள்வி எழுப்பிய போது, பாகிஸ்தான் தன்னுடைய அரசு கொள்கைகளில் ஒன்றாக தீவிரவாதத்தினையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் கொண்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதையும் தன்னுடைய மண்ணில் இருந்து தீவிரவாதத்தை அழிப்பதையும் பாகிஸ்தான் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் மிகவும் நல்ல அண்டை நாட்டினர் போல தற்போது நடிக்க ஆரம்பித்துள்ளனர். ஒரு நல்ல அண்டை நாடு என்ன செய்யும், மற்ற நாடுகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும். இயல்பாக பேசும். இயல்பாக வர்த்தகம் புரிய துவங்கும்.

பாகிஸ்தானில் எல்லையோர, விமானநிலையங்கள் மூடுவது குறித்தும் எங்களுக்கு எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அங்கு விமான சேவைகள் செயல்படாது என்று நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம் என்று அவர் கூறினார். ஆனாலும், பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை குறித்து நாங்கள் அறிவோம் என்றும் தெளிவுபடுத்தினார் ரவீஷ் குமார்.

அட்டாரி எல்லைப் பகுதியில், செப்டம்பர் முதல் வாரத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர். குருநானக்கின் பிறந்தநாளான நவம்பர் 12ம் தேதி, லாகூரில் இருந்து 125 கி.மீ அப்பால் இருக்கும் நரோவல் பகுதியில் அமைந்திருக்கும் சீக்கியர்களின் புனித தலத்திற்கு இந்தியர்களை அனுமதிப்பது குறித்து இப்பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment