Advertisment

அஞ்சல் சேவை நிறுத்தம்: சர்வதேச விதிமுறையை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா புகார்

Pakistan stopping postal mail to India : இந்தியா உடனான அஞ்சல் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது சர்வதேச விதிகளை மீறிய செயல் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Personal Data Protection Bill listed to be introduced in Lok Sabha

Personal Data Protection Bill listed to be introduced in Lok Sabha

இந்தியா உடனான அஞ்சல் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது சர்வதேச விதிகளை மீறிய செயல் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்தியா நாட்டுடன் உடனான அஞ்சல் சேவையை, பாகிஸ்தான் ஒருதலைபட்சமாக நிறுத்தியுள்ள செயல், சர்வதேச அஞ்சல் விதிகளை மீறும் செயல் ஆகும். இதன்மூலம், பாகிஸ்தானின் உண்மை முகம் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு, குறித்து அது இந்தியாவிடம் விவாதிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த இந்திய அஞ்சல் சேவை (இயக்குனர் ) ஆர்..வி. சவுத்ரி கூறியதாவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட எந்தவொரு கடிதத்தையும், பாகிஸ்தான் பெற்றுக்கொள்ளவில்லை.

இது பாகிஸ்தானின் ஒருதலைப்பட்சமான முடிவு ஆகும். சர்வதேச நாடு ஒன்று, இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த தடையுத்தரவு, எப்போது திரும்ப பெறப்படும் என்பது தெரியவில்லை என அவர் மேலும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் பிரதிநிதி கவாஜா மாஜ் தாரிக்கை தொடர்பு கொண்டபோது, இதுதொடர்பாக, தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

India Pakistan Union Minister Ravi Shankar Prasad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment