'பாகிஸ்தான் F16 விமானத்தை பயன்படுத்தியது; ஆதாரம் இதோ!' - ஏர் மார்ஷல்

India-Pakistan tension LIVE News Updates : பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையே மூன்று வார காலங்களாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய இந்திய விமானப்படை, பாகிஸ்தான் மண்ணில் வான்வழி தாக்குதலை நடத்தியது.

India-Pakistan tension

இந்நிலையில் பாகிஸ்தானின் விமானங்கள் இந்தியாவில் ஊடுருவி பின்பு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து சென்ற ராணுவ விமானம் மாயமானது. அதனை இயக்கிய அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் கையில் சிக்கியுள்ளார்.

அவரைப் பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டது பாகிஸ்தான் ராணுவம். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “காயம்பட்ட ராணுவ வீரரின் வீடியோவை வெளியிட்டத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது. ஜெனிவா உடன்படுக்கைப் படி அபிநந்தன் போர் கைதியாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

08:00 PM – முப்படை அதிகாரிகள் சந்திப்பின் சுருக்கம்

“பாகிஸ்தான் இந்த தாக்குதல் விவகாரத்தில் பொய் சொல்லியிருக்கிறது. அவர்கள், நம் ராணுவ தளவாடங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தினார்கள். பாகிஸ்தானின் F16 ரக விமானங்கள், இந்தியாவிற்குள் நுழைந்ததை ரேடார் மூலம் கண்டறிந்தோம். அவர்கள் நம்மில் சேதாரம் ஏற்படுத்த நினைத்தார்கள். ஆனால், நாம் தக்க பதிலடி கொடுத்ததால், நமக்கு பாதிப்பு ஏற்படவில்லை. பாகிஸ்தானின் ஒரு F16 ரக விமானத்தை நாம் சுட்டு வீழ்த்தினோம். அதேபோல், நமது MiG 21 ரக விமானம் ஒன்றையும் இழக்க நேர்ந்தது. அப்போது விமானி பத்திரமாக தன்னை எஜெக்ட் செய்து கொண்டார். ஆனால், அவர் பாகிஸ்தான் எல்லையில் இறங்கியதால், அவர்கள் கஸ்டடியில் உள்ளார். F16 ரக விமானத்தை அவர்கள் பயன்படுத்தியதை மறைக்க முயற்சிக்கிறார்கள். அபி நந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதனை, இந்திய விமானப்படை மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியுள்ளது. ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தாலும், திருப்பி பதில் தர தயாராக உள்ளது. அது போல் கப்பற்படையுடன் முழு வீச்சில் தயாராக உள்ளது. பாலகோட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்பதை  முழுவதும் சொல்வது சரியாக இருக்காது. நாம் எதை குறிவைத்து தாக்கினோமோ, அது முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது”.

07:25 PM – முப்படை அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு இரவு 7:05 மணிக்கு நடைபெற்றது. இதில்,”பாகிஸ்தான் F16 வகை விமானத்தை பயன்படுத்தியது என்றும், அதற்கான ஆதாரத்தையும் ஏர் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர் ஊடகங்களுக்கு காண்பித்தார். மேலும், தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் பொய்களை சொல்லியுள்ளது என்றும் கூறிய ஏர் மார்ஷல் அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

05:25 PM – முப்படைகளின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அபி நந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் அறிவித்து இருக்கும் நிலையில், இரவு 7 மணிக்கு முப்படைகளின் சந்திப்பு நடைபெறும் என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

04:44 PM – பாகிஸ்தானில் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அபி நந்தன் நாளை (பிப்.29) விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். நல்லெண்ண அடிப்படையில் அபி நந்தன் ரிலீஸ் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

04:00 PM : எந்த காயமும் இல்லாமல் அபி நந்தன் தாயகம் திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தானிடம் மத்திய அரசு கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ  தகவல்கள் வெளியாகியுள்ளன.

03:10 PM : புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆவணங்களை பாகிஸ்தானிடம் அளித்தது இந்தியா

பாகிஸ்தானின் வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முகமது ஃபைசல், இஸ்லமாபாத்தில் இன்று, புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆவணங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்ததை உறுதி செய்தார். புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானியர்களின் பங்கு இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

02:15 PM : முப்படை அதிகாரிகள் – செய்தியாளர்கள் சந்திப்பு

இந்திய ராணுவம், கப்பற்படை, மற்றும் விமானப்படை அதிகாரிகள் இன்று மாலை 5 மணிக்கு கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்.

01:15 PM : அமெரிக்க அதிபர் கருத்து

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தணியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் நம்பிக்கை.

01:00 PM : இந்தியா ஒற்றுமையாக சண்டையிட்டு வெற்றி பெறும் – நரேந்திர மோடி

பாஜக தொண்டர்கள் மத்தியில் இன்று பேசிய நரேந்திர மோடி, இந்தியாவை பாதுகாக்கும் அனைவருக்கும் நன்றி.. இந்தியா ஒன்றாக, ஒற்றுமையாக வாழும். ஒன்றாக வேலை செய்யும். ஒன்றாக வளர்ச்சியடையும். ஒரே நாடாக ஒற்றுமையாக இந்தியா சண்டையிடும். வெற்றி பெறும் என்று பேசியுள்ளார்.

12:15 PM : கார்கில் போரின் போது சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களின் நிலை என்ன ஆனது ?

1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் போது இந்திய விமானப்படை வீரர்கள் இருவர் பாகிஸ்தான் எல்லையில் சிக்கிக் கொண்டனர். அதில் ஒருவர், விமானம் வீழ்த்தப்பட்ட போதே மரணமடைய, மற்றொருவர் 8 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக வீடு திரும்பினார்.

அது குறித்த முழுமையான செய்திகளைப் படிக்க

12:00 PM : ஐநா தலைவர் ஆண்டனியோ குட்டரெஸ் கருத்து

இந்தியா பாகிஸ்தானிற்கு இடையே நிகழும் பதட்டமான சூழலைக் கண்டு தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இரு நாடுகளும் விரைவில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

11:45 AM: போர் வேண்டாம்… வலியுறுத்தும் அமெரிக்க அதிகாரிகள்

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ பேசியது போலவே, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கமாண்டர் அட்மிரல் பிலிப் டேவிட்சன், இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பாவிடம் பேசினார்.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கோகலேவுடன் பேசியுள்ளார். அமெரிக்க நிர்வாகம் இதே போன்ற பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் அதிகாரிகளிடமும் நடத்தியுள்ளது.

11:30 AM : அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகுங்கள் – அமெரிக்கா வேண்டுகோள்

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ, இனிமேல் எந்த விதமான ராணுவ தாக்குதலையும் மேற்கொள்ளாதீர்கள். அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராகுங்கள் என இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களிடமும் பேசியுள்ளார்.

11:15 AM : யார் அந்த அபிநந்தன் ?

பாகிஸ்தானின் ராணுவ முகாமில் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் இந்திய வீரர் அபிநந்தன் சென்னையை பூர்வீகமாக கொண்டவர். அவருடைய தந்தை சிம்ஹகுட்டி வர்த்தமான் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷெல் ஆவார். அவருடைய தயார் ஒரு மருத்துவர். அவரைப் பற்றிய முழுமையான செய்திகளைப் படிக்க 

11:00 AM : பாலகோட் தாக்குதல் கர்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவாக அமையும் – எடியூரப்பா

பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது இந்திய விமானப்படை. இதன் மூலம் பாஜகவிற்கு ஆதரவுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பாஜக மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில் 22 இடங்களில் பாஜக வெற்றி பெற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

10:45 AM இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று மாலை 06:30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடைபெற உள்ளது.

10:25 AM : சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே செயல்பட்டு வரும் சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக டாவ்னின் செய்தி குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலில் 16 நபர்கள் மட்டுமே பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

10:00 AM : அபிநந்தன் பத்திரமாக மீட்கப்படுவார் – வி.கே. சிங்

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தன்னுடைய டிவிட்டரில் இவ்வாறு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அபிநந்தன் சுயநலமற்ற, தைரியமான வீரர் என்றும், இது போன்ற இக்கட்டான சூழலில் இந்திய மக்கள் அனைவரும் அபிநந்தனிற்காகவும், அவரின் குடும்பத்தினருடனும் துணை நிற்போம் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜெனிவா ஒப்பந்தம் படி விரைவில் அவரை இந்தியாவிற்கு மீட்டு வருவோம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close