Advertisment

சர்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு

India to keep scheduled international passenger flights suspended till Jan 31: சர்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடை ஜனவரி 31, 2022 வரை நீட்டிப்பு; சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
சர்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடை ஜனவரி 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமானச் சேவைக்கான தடையை ஜனவரி 31, 2022 வரை நீட்டித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

Advertisment

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. பின்னர் நோய்த்தொற்று குறைந்த நிலையில், கட்டுப்பாடுகளுடன் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சிறப்பு சர்வதேச விமானங்களாக இயக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் சர்வதேச பயணிகள் விமானங்களை, டிசம்பர் 15 முதல்  வழக்கம்போல தொடங்க இந்தியா திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனாவின் புதிய வகையான ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு மீண்டும் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை நீட்டிக்க முடிவு செய்தது. 

அதன்படி, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31, 2022 வரை நீட்டித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

ஒரு செய்திக்குறிப்பில், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், '26-11-2021 தேதியிட்ட சுற்றறிக்கையின் பகுதியளவு மாற்றத்தின் மூலம், திட்டமிடப்பட்ட இந்தியாவிலிருந்து அல்லது இந்தியாவிற்கான சர்வதேச வணிகப் பயணிகள் சேவைகள் ரத்தை ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்க மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.' என்று தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து மற்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு கட்டுப்பாடுடன் மேற்கொள்ளும் விமானப்போக்குவரத்து சேவை தொடரும் எனவும் மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

Coronavirus Omicron Flight
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment