Advertisment

இன்னும் எத்தனை காலம்?!.. இந்தியாவின் காத்திருப்பை ஐ.நாவுக்கு உணர்த்திய மோடி

author-image
WebDesk
New Update
ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி

ஐக்கிய நாடுகள் அமைப்பான ஐ.நா. சபை தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதையொட்டி உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட சிறப்பு விவாதம் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக காணொலிக் காட்சி வாயிலாக இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடியின் உரை விடியோவாக பதிவு செய்யப்பட்டு, கூட்டத்தில் வெளியிடப்பட்டது. மிககவனமாக வடிவமைக்கப்பட்ட 22 நிமிட உரையில், சீனா - பாகிஸ்தான் உறவு, ஐநா அமைப்பில் உறுப்பினராக இந்தியா மாற இருக்கும் தடை குறித்து பிரதமர் காட்டமாக பேசியிருந்தார்.

Advertisment

அதில், ``ஐ.நா. அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில், இந்தியாவும் ஒன்று என்பதில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் பெருமைப்படுகிறோம். உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு இந்தியா. அந்த ஜனநாயக நாட்டின் 130 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக இக்கூட்டத்தில் பங்கேற்கிறேன். உலக மக்கள் தொகையில் 18 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக பல ஆண்டுகளாக இந்தியா விளங்கி வருகிறது.

கடந்த, 75 ஆண்டுகளில், ஐ.நா பல சாதனைகளை செய்துள்ளது. அதே நேரம், ஐ.நாவின் பணிகளை ஆராய வேண்டிய அவசியம் உள்ளன. அதனை சுட்டிக்காட்டும் நிகழ்வுகளும் உள்ளன. தீவிரவாதம் உள்ளிட்ட சர்வதேச பிரனைகளில், ஐ.நா-வின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறதா?. தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நாவின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.

ஐ.நா.வில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா்கள் காத்துக் கொண்டிருக்கின்றனா். ஐ.நா விரிவுபடுத்தப்பட்டு அதில் இந்தியாவின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனா். அதற்கான அவசிமும், சிறந்த தருணமும் இதுவே. ஐ.நா., சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா நீண்டகாலமாக காத்திருக்கிறது. இதற்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என தெரியவில்லை. ஐ.நாவின் முடிவு எடுக்கும் அமைப்புகளில் இருந்து உறுப்பினர் ஆவதற்கு, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு, உலகின் மிகப் பெரிய நாடான இந்தியா ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும்" என்று கேள்வி எழுப்பியவர், சீனா பாகிஸ்தான் உறவை மறைமுகமாக சாடினார்.

``ஒரு நாட்டின் நட்பை, இந்தியா ஒருபோதும் மூன்றாம் நாட்டிற்கு எதிராக திசைதிருப்பியதில்லை. “மூன்றாம் உலகப் போரை நாங்கள் வெற்றிகரமாகத் தவிர்த்துவிட்டோம் என்று ஒருவர் கூறலாம். ஆனால் பல போர்களும், இன்னும் பல உள்நாட்டுப் போர்களும் நடந்துள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. பல பயங்கரவாத தாக்குதல்கள் உலகை உலுக்கியது, மேலும் இரத்த ஆறுகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர் ஆசனத்தை 2021 ஜனவரி முதல் இரண்டு வருட காலத்திற்கு இந்தியா எடுக்கவுள்ள நிலையில், இந்தியா எப்போதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஆதரவாக பேசும். இந்தியா, முழு மனிதகுலத்தின் நலன்களைப் பற்றி எப்போதும் சிந்தித்து வருகிறது. ஒருபோதும் சொந்த நலன்களைப் பற்றி அல்ல. இந்த தத்துவம், எப்போதும் இந்தியாவின் கொள்கைகளின் உந்து சக்தியாக இருந்து வருகிறது. நாங்கள் எப்போதும் மனிதகுலத்தின் நலன்களுக்காக உழைத்திருக்கிறோம். எங்கள் சொந்த நலன்களுக்காக அல்ல. இந்தியாவின் கூட்டாண்மை எப்போதும் இந்த கொள்கையால் வழிநடத்தப்படுகிறது.

கடந்த எட்டு முதல் ஒன்பது மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறது. தொற்றுநோய்க்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது? இந்தப் போராட்டத்தில் உலக நாடுகளுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. செயல்படாதது ஏன்?.

எங்கள் வளர்ச்சியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் ஒருபோதும் தயங்கவில்லை. பொங்கி எழும் இந்த தொற்றுநோய்களின் மிகக் கடினமான காலங்களில் கூட, இந்தியாவின் மருந்துத் தொழில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு என்ற வகையில், உலகளாவிய சமூகத்திற்கு இன்று ஒரு உறுதிமொழியை வழங்க விரும்புகிறேன். இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு அனைத்து மனிதர்களுக்கும் உதவ இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் பயன்படுத்தப்படும்.

கடந்த சில மாதங்களாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறது. தொற்று நோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில், ஐ.நா., பங்கு என்ன? கொரோனாவை எதிர்கொள்ள உலகளாவிய ஒற்றுமை தேவை. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில், இந்தியா மூன்றாம் கட்டத்தில் உள்ளது. உலகில், அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடு என்ற வகையில், உலகளாவிய சமூகத்திற்கு ஒரு உறுதிமொழியை வழங்க விரும்புகிறேன்.

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுடன் முன்னேறி வருகிறோம். உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில், அதை சேமித்து வைப்பதற்கான குளிா்பதனக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் இந்தியா உறுதி கொண்டுள்ளது. நாங்கள் வலுவாக இருந்தபோது, ​​நாங்கள் ஒருபோதும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை, நாங்கள் பலவீனமாக இருந்தபோது, ​​நாங்கள் ஒருபோதும் உலகத்திற்கு ஒரு சுமையாக மாறவில்லை" என்று பேசி முடித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Narendra Modi United Nations
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment