‘இந்து பாகிஸ்தான்’ ஆகும் இந்தியா: சசி தரூர் எச்சரிக்கை

காங்கிரஸ் எம்பி சசி தரூர் நேற்று கேரளத்தில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பரபரப்பு பேச்சு

இந்தியாவின் குடியாட்சி மற்றும் மதசார்பற்ற தன்மை சந்தித்துவரும் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் நேற்று திருவனந்தபுரத்தில் சசி தரூர் பேசினார்.

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி மற்றும் முன்னாள் மனிதவளத் துறை அமைச்சர் சசி தரூர் இக்கருத்தரங்கில் பேசிய போது, பாஜகவினர் 2019ஆம் ஆண்டும் லோக்சபாவில் பெரும்பான்மை பெருவார்கள் எனில் இந்தியா ஒரு ‘இந்து பாகிஸ்தான்’ நாடாக மாறிவிடும் என்று கூறினார்.

“பஜாகவின் கதாநாயகன் என்று வர்ணிக்கப்படும் வீர் சவர்கர் போன்றவரின் ஆசையை நிறைவேற்றுவதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் பாஜகவினர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்திய போது அதை தொடர்ந்து எதிர்த்து வந்தவர் வீர் ச்வர்கர். இந்துத்துவ கொள்கைகளுடன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். மூன்றில் இரண்டு பங்கு ராஜ்ய சபை உறுப்பினர்கள், மூன்றில் இரண்டு பங்கு லோக்சபை உறுப்பினர்கள், மற்றும் பாதி மாநிலங்களுக்கு மேல் பாஜகவின் ஆட்சி அமைந்தால் தன்னுடைய விருப்பம் போல் அரசியலமைப்பினை உருவாக்கலாம் என்று அவர் கனவும் கண்டதுண்டு.

இன்றைய பாஜகவினர் கையில் மூன்றில் இரண்டு பங்கு லோக்சபை இடங்கள் உள்ளன. 20 மாநிலங்களில் தனி ஆட்சியினையும், 2 மாநிலங்களில் கூட்டாட்சியினையும் நடத்துகிறார்கள். இன்னும் 4-5 வருடங்களில் ராஜ்யசபை உறுப்பினர்களிலும் மூன்றில் இரண்டு பங்கு அவர்கள் வந்துவிடுவார்கள்.

அப்படி மட்டும் நடக்கும் பட்சத்தில், இந்தியாவில் தற்போது இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் காணாமல் போய்விடும். அனைத்தையும் அழித்துவிட்டு இவர்கள் புதிதாக ஒரு அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்குவார்கள். அதில் இந்து ராஜ்ஜியம் மேலோங்கி இருக்கும். இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கும் சம உரிமை மறுக்கப்படும். இந்தியா ஒரு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்” என்று கூறினார்.

“மேலும், இப்படியான ஒரு இந்து பாகிஸ்தான் நாட்டின் உருவாக்கத்திற்காக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், மற்றும் ஆயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களிடம் போராடவில்லை” என்றும் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close