இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் அடுத்த படைப்பு ieBangla.com!

பெங்காலி மொழியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ieBangla.com கண்டிப்பாக உங்களை கவரும்

பத்திரிக்கை துறையில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், தனது அடுத்த படைப்பான  bengali.indianexpress.com  யை தொடக்கியுள்ளது.

’ஊடகத்துறை’ என்பது அரசாங்கத்திற்கு அல்ல மக்களுக்காவே என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வரும் தேசிய ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஆங்கிலத்தைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் தனது பணியைத் துவக்கியது. மக்களின் பேராதரவாலும், தமிழ் மற்றும் மலையாளத்திற்கு  கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது பெங்காலி மொழியிலும் கால் பதித்துள்ளது.

வாசகர்களுக்கு விருப்பமான அரசியல், பொழுதுபோக்கு,  விளையாட்டு, தொழில்நுட்பம் குறித்த செய்திகளை உடனுக்குடன்  தெளிவாகவும், சுருக்கமாக படித்து தெரிந்துக் கொள்ளலாம்.  அத்துடன், புதிய முயற்சியாக பெங்காலி மக்களின் கலை மற்றும் கலாச்சாரம் குறித்த  தகவல்களை நாடறிய செய்யும் விதமாக வாரங்தோறும்  பெங்காலி மக்கள் குறித்த சிறப்பு செய்தியும் இடம் பெறவுள்ளது.

இதுக் குறித்து பேசிய, இந்தியன் எக்ஸ்பிரஸ் டிஜிட்டல் தலைமை நிர்வாக அதிகாரி துர்கா ரகுநாத், “ சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.  உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், அவர்களின் தாய் மொழியிலியே செய்திகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கனவு. ஊடகவியலார்களின் பொறுப்பை உணர்ந்த நாங்கள் கண்டிப்பாக அதை திறம்பட செய்வோம். பெங்காலி மொழியில்  ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த  bengali.indianexpress.com கண்டிப்பாக உங்களை கவரும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி பெங்காலி புத்தாண்டை முன்னிட்டு   ieBangla.com  மக்களுக்கு சேவை புரிய துவங்கப்பட்டது.  ஏற்கனே இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இணைய நாளிதழ்களாக Financialexpress.com, Loksatta.com and Jansatta.com போன்றவற்றிற்கு நாடு முழுவதும் வெகுவான பாராட்டுக்கள் இருந்து வரும் நிலையில், இந்த புதிய வரவான  bengali.indianexpress.com மக்களிடம்  நல்ல பெயரை பெரும் என்பதில்  ஐயமில்லை.

 

×Close
×Close