Advertisment

மருத்துவர்கள் குறித்து அவதூறு : யோகா குரு ராம்தேவ்க்கு இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

Indian Medical Council : மருத்துவர்கள் குறித்து அவதூறு கருத்து கூறிய யோகா குரு ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
மருத்துவர்கள் குறித்து அவதூறு : யோகா குரு ராம்தேவ்க்கு இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

அலோபதி மருத்துவம் மற்றும் அந்த துறை சார்ந்த மருத்துவர்களுக்கு எதிரான தான் கூறிய அவதூறான கருத்துக்களுக்கு பாபா ராம்தேவ் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படி கேட்கவில்லை என்றால்,  அவரிடம் 1000 கோடி இழப்பீடு கேட்கப்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) எச்சரித்துள்ளது.

Advertisment

ஐ.எம்.ஏ (உத்தரகண்ட்) செயலாளர் அஜய் கன்னா தனது வழக்கறிஞர் நீரஜ் பாண்டே மூலமாக அனுப்பியுள்ள நோட்டீசில், யோகா குரு ராம்தேவ் கூறிய கருத்துக்கள் அலோபதியின் நற்பெயருக்கும், உருவத்திற்கும் சேதம் விளைவிப்பதாகவும், சங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சுமார் 2,000 பயிற்சியாளர்கள் குறித்து அவதூறு பரப்புவதாகவும் உள்ளது.

இதனால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 வது பிரிவின் கீழ் யோகா குரு ராம்தேவின் கருத்துக்கள் ஒரு "குற்றச் செயல்" என்று கூறி, இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் அவரிடர் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்க வேண்டும் அவ்வாறு செய்யத் தவறினால், ரூ .1,000 கோடி இழப்பீடு கோரப்படும் என்று கூறினார். மேலும் ஐ.எம்.ஏ இன் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ .50 லட்சம் வீதம் கோரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராம்தேவ், “கோவிட் -19 க்கு அலோபதி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் லட்சக்கணக்கானோர் இறந்துவிட்டார்கள்” என கூறியிருந்தார். இது தொடர்பாக வீடியே இணையதளத்தில் வைரலானது.  அவரின் இந்த கருத்தக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் "மிகவும் துரதிர்ஷ்டவசமான" இந்த அறிக்கையை திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் தொடர்ந்து கொரோனாவுக்கு தனது நிறுவனத்தின் தயாரிப்பான “கொரோனில் கிட்” ஒரு சிறந்த மருந்தாக இருக்கும் என்று அனைத்து தளங்களிலிருந்தும் ஒரு “தவறான” விளம்பரத்தை வெளியிட்டுள்ள ராம்தேவ் அதனை திரும்பப் பெற வேண்டும் என்றும், மீறினால், அவருக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று ஐஎன்ஏ கூறியுள்ளது.

இந்நிலையில், அடுத்து ஒரு நாள் கழித்து, யோகா குரு ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ.எம்.ஏ-க்கு 25 கேள்விகளை முன்வைத்தார், உயர் இரத்த அழுத்தம் வகை -1 மற்றும் 2 நீரிழிவு போன்ற நோய்களுக்கு அலோபதி நிரந்தர நிவாரணம் அளிக்கிறதா என்று கேட்டிருந்தார். தொடர்ந்து பார்கின்சன் நோய் போன்ற நவீன நோய்களை குறித்து கேட்ட அவர், கருவுறாமைக்கு சிகிச்சையளிப்பதற்கும் வயதானதை மாற்றியமைப்பதற்கும் ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கும் அலோபதியில் வலியற்ற சிகிச்சை இருக்கிறதா என்று கேட்டிருந்தார்.

இது குறித்து ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா  தனது ட்விட்டர் பக்கத்தில், யோகா குருவும் ஆயுர்வேதமும் ஐ.எம்.ஏ இன் கீழ் உள்ள அலோபதி பயிற்சியாளர்களால் ஒரு சதித்திட்டத்தின் கீழ் குறிவைக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து "முழு நாட்டையும் # கிறிஸ்தவ மதமாக மாற்றுவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக, # யோகா மற்றும் # ஆயுர்வேதம் @ யோகிரிஷிராம்தேவ் ஜீயை குறிவைத்து மோசனமான செயல்கள் நடைபெறுகிறது. நாட்டு மக்களே, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து இப்போது எழுந்திருங்கள், இல்லையெனில் வரும் தலைமுறையினர் உங்களை மன்னிக்க மாட்டார்கள் ”என்று பால்கிருஷ்ணா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment