தகுந்த ஆவணமின்றி பயணம் செய்ததாக புகார்... பாகிஸ்தானில் இந்தியர் கைது!

கைது செய்யப்பட்ட இந்தியர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் முழுமையான ஆவணங்கள் இன்றி பயணம் மேற்கொண்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த நாட்டின் வெளியுறவு சட்டம், பிரிவு 14-ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இந்திய முனனாள் கடற்படை வீரனான குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பாக இந்தியாவின் முறையீட்டை தொடர்ந்து, குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குதண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இருநாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close