லண்டனில் இந்திய தேசிய கொடியை சேதப்படுத்தி போராட்டம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன்

இந்தியாவில் நடக்கும் குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்காத இந்திய அரசை எதிர்த்து தேசிய கொடியை சேதப்படுத்தும் போராட்டத்தை லண்டன் வாழ் இந்தியர்கள் நடத்தினர்

அரசு முறைப் பயணமாக மோடி 5 நாள் பயணத்தை கடந்த 16ம் தேதி மேற்கொண்டார். முதலில் ஸ்வீடனுக்கு புறப்பட்டுச் சென்ற மோடி, அங்கிருந்து 17ம் தேதி லண்டனுக்குப் புறப்பட்டார். 18ம் தேதி இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்தித்து இரு நாடுகளின் ஒற்றுமை மேம்பாடு, தீவிரவாதம் அடக்குமுறை உட்பட பல்வேறு விவரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து லண்டன் வாழ் தமிழர்கள், கோ பேக் மோடி என்று போராட்டம் நடத்தினர்.

national flag burnt

நேற்று பிரிட்டனில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். காமன்வெல்த் போட்டிக்கான அனைத்து நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுக் கொண்டார். இந்தியாவில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிரிட்டன் பாராளுமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் இந்தியர்களுக்கு ஆதரவாக காலிஸ்தான் ஆதரவாளர்களும் பங்கேற்றனர். மோடிக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இந்திய நாட்டின் தேசிய கொடியைக் கிழித்தும், எரித்தும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது, தேசியக் கொடியை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவலர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. மேலும், நேற்று நிகழ்ந்த சம்பவத்தை இந்திய அரசு கண்டித்துள்ள நிலையில், இதற்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close