இந்தியாவில் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு : கேம்பிரிட்ஜ் டிராக்கர் எச்சரிக்கை

Omicron Variant Update : இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 15 முதல் 18 வயதுடைய இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்க உள்ளது.

Indian Omicron Update :இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புடன் ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்னும் சில நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்றின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றும், வேகமான பரவும் திறன் கொண்ட ஒமைன்ரான் தொற்று குறுகிய காலத்தில் தீவிர தாக்குதலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை மற்றும் தீவிர வளர்ச்சியின் கட்டம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் என்று இந்தியாவில் கொரோனா தொற்று வளர்ச்சியை கண்கானிக்கும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டு வணிகப் பள்ளியின் பேராசிரியர் பால் கட்டுமான் டிராக்கர், ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்..

மேலும் “புதிய நோய்த்தொற்றுகள் சில நாட்களில் உயரத் தொடங்கும் என்றும், இந்த உயர்வு ஒருவேளை இந்த வாரத்திற்குள்,” இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ள அவர் தினசரி பாதிப்புகள் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதைக் கணிப்பது கடினம் என்றும் கூறியுள்ளாா. .

இந்தியா கோவிட் டிராக்கரின் டெவலப்பர்களான கட்டுமன் மற்றும் அவரது ஆராய்ச்சியாளர்கள் குழு இந்தியா முழுவதும் தொற்று தொற்று நோய் பாதிப்புகளின் உயர்வை கண்கானித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த டிச. 24 வெளியான குறிப்பில், ஆறு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவு தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்றும்,  புதிய பாதிப்புகளின் வளர்ச்சி விகிதம் 5% அதிகமாக உள்ளது. இது டிச. 26க்குள் 11 இந்திய மாநிலங்களாக விரிவடைந்தது, பெரிய தாக்குதலை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இன்று 9,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மூன்று வாரங்களில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் அதிகபட்சமாகும் இதன் மூலம் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.8 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 480,592 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், வேமாக பரவும் திறன்கொண்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மற்றொரு பெரிய தொற்றை தடுக்க தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த வாரம், இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 15 முதல் 18 வயதுடைய இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிட்ஜ்பேக் பயோதெரபியூட்டிக்ஸ் உடன் இணைந்து மெர்க் & கோ (Merck & Co.) உருவாக்கிய மேலும் இரண்டு தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிவைரல் மாத்திரை மோல்னுபிராவிர், உள்ளூர் மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள தலைநகர் புது தில்லி திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் ஜிம்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுகூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தோடர்ந்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும், என்றும் பார்கள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்களில் 50% ஊழியர்களுடன் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் நேற்று 1,377 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் இந்தியா கற்றுக்கொண்ட கடினமான பாடங்களை காட்டுகிறது, இது ஒவ்வொரு நாளும் 400,000-க்கும் அதிகமான தொற்றுநோய்களை சாதனையாகத் தள்ளியது. இந்த நிலை நாட்டின் மருத்துவமனைகள் மற்றும் உடல் தகன இடங்களில் பெரிய கூட்டத்தில் மூழ்கடித்தது

மேலும் கொரோனா தொற்றின் 2-வது அலையின் போது நாட்டின் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. மே மாதத்தில் இந்த அழிவுகரமான இரண்டாவது அலையின் உச்சத்தை சரியாக புரிந்துகொண்டு தடுப்பூசி செலுத்தப்படுவதை போதுமான அளவு அதிகரிக்கும் வரை இந்தியா தனது கோவிட் தொற்று பாதிப்பில் சிக்கி தவிக்கும் என்று ஆகஸ்ட் மாதத்தில் கணித்துள்ளது. இதில் கொரோனா தொற்றின் 2-வ அலையின் போது கடந்த அக்டோபரில் இந்தியா 1 பில்லியனைத் பாதிப்புகளை உறுதி செய்தது. மேலும் புதிய பாதிப்புகள் உச்சத்தை தொட்டு புதிய மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian omicron cambridge tracker says india may see surging cases

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com