Advertisment

இந்திய ரயில்வே பட்ஜெட் 2020-21: நாடு முழுவதும் 11,000 கி.மீ. ரயில்பாதைகள் மின்மயமாக்கல்

Railway Budget 2020: மத்திய ரயில்வே பட்ஜெட் 2020

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ரயில்வே தனியார் மயம்: முக்கியத்துவம் பெறுமா தாம்பரம் ரயில் நிலையம் ?

 Indian Railway Budget 2020-21: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று (பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவர் தாக்கல் செய்கிற இரண்டாவது பட்ஜெட் ஆகும்.

Advertisment

Budget 2020 Live Updates காண இங்கே க்ளிக் செய்யவும்

இப்போது ரயில்வே பட்ஜெட்டும் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தே தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில்தான் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. எனவே ரயில் கட்டண உயர்வு இருக்காது. புதிய ரயில்கள், புதிய வழித்தடங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், ரயில்வே தனியார்மயம் பற்றிய அறிவிப்புகள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Budget 2020 LIVE updates

2024- ஆம் ஆண்டுக்குள் அனைத்து வழித்தடங்களையும் மின்சாரமயமாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதால், இதற்கான திட்டமிடல் பற்றிய அறிவிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2020: தமிழகம் எதிர்பார்ப்பது என்ன? நிதிச் சிக்கல் தீருமா?

கடந்த வாரம் டெல்லியில் நடந்த இந்திய மற்றும் பிரேசில் நாடுகளின் வர்த்தக மன்றத்தில் பேசிய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், "நாட்டில் வருகிற 2024ம் ஆண்டிற்குள் ரயில்வே துறை 100 சதவீதம் அளவிற்கு மின்மயம் ஆக்கப்படும். இதனால் உலகிலேயே 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கக்கூடிய மிகப்பெரிய முதல் ரயில்வே துறையாக இந்திய ரயில்வே இருக்கும்" என்றார்.

ரயில்வே பட்ஜெட் குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கே நீங்கள் உடனுக்குடன் காணலாம்.

கிஸான் ரயில்கள் அறிமுகம்:

இந்திய ரயில்வே இப்போது உணவு விநியோகத்தில் இன்னும் அதிக பங்கு வகிக்கும். நாட்டுக்குள் விரைவில் அழுகக் கூடிய விவசாய பொருட்களை பத்திரமாக கொண்டு சேர்க்கும் விதமாக, கிஸான் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது - நிர்மலா சீதாராமன்

ரயில்வேயில் இருக்கும்போது, எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்களில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் சேர்க்கப்படும்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த திட்டத்தின் மூலம், பழங்கள், பால் பொருட்கள், மீன், இறைச்சி போன்றவற்றை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

2009 - 10 பட்ஜெட்டின்போது அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி விவசாய பொருட்களுக்கான ரயில் திட்டத்தை அறிவித்தார். ஆனால் அந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதில் தோல்வி அடைந்தது.

தேஜாஸ் ரயில்கள்:

இந்தியாவின் சுற்றுலாத்தளங்களை இணைக்கும் வகையில் தேஜாஸ் வகை ரயில்கள் இணைக்கப்படும்.

ரயில் பாதை மின்மயமாக்கல்:

நாடு முழுவதும் 11,000 கி.மீ. ரயில்பாதைகள் மின்மயமாக்கப்படும்.

டெல்லி மும்பை அதிவிரைவு சாலைப்பணியை 2023க்குள் நிறைவு செய்ய இலக்கு.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment