Advertisment

இதெல்லாம் ”பாவம் மை சன்”... ஐ.ஆர்.சி.டி.சி-யை திட்டித் தீர்க்கும் பயணிகள்!

மேலும் இந்த வருவாயை படுக்கை வசதி மற்றும் மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட வசதி உள்ள பயணச்சீட்டு எடுத்த பயணிகளிடம் இருந்து தான் வசூலித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian Railways IRCTC earns several thousand crores

Indian Railways IRCTC earns several thousand crores

Indian Railways IRCTC earns several thousand crores : உறுதியாகாத ரயில் பயணச்சீட்டை ரத்து செய்யவில்லையா? இந்திய ரயில்வே பல ஆயிரம் கோடிகளை இந்த வகை பயணிகளிடமிருந்து வசூலித்துள்ளது.  காத்திருப்பு பட்டியலில் உள்ள உறுதியாகாத ரயில் பயணச்சீட்டை (waitlisted train ticket) ரத்து (cancel) செய்யவில்லையா? உறுதியாகாத தங்கள் ரயில் பயணச்சீட்டை ரத்து செய்ய மறந்த பயணிகளிடமிருந்து இந்திய ரயில்வே பல கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ளது.

Advertisment

கடந்த மூன்று வருடங்களில் இந்திய ரயில்வே பயணச்சீட்டு ரத்து செய்யும் கட்டணம் (ticket cancellation charges) மற்றும் உறுதியாகாத பயண்ச்சீட்டை ரத்து செய்யாமல் விட்ட பயணிகளிடமிருந்து ரூபாய் 9,000 கோடிகளை வருவாயாக ஈட்டியுள்ளதாக ஒரு தகவல் உரிமை சட்ட பதிலை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 9000 கோடி வருவாய் 2017 மற்றும் 2020 க்கு இடைப்பட்ட காலத்தில் ஈட்டியுள்ளதாக சுஜித் சுவாமி என்ற செயற்பாட்டாளரின் தகவல் உரிமை சட்ட விண்ணப்பத்திற்கு பதிலளிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் படிக்க : எஸ்பிஐ EMV டெபிட் கார்டை ஆன்லைனில் எப்படி வாங்குவது?

தேசிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வே தங்களது உறுதிசெய்யப்படாத ரயில் பயணச்சீட்டை ரத்து செய்யாத 9.5 கோடி ரயில் பயணிகளிடமிருந்து இந்த அபார தொகையான ரூபாய் 4,335 கோடி வருவாயை 1 ஜனவரி 2017 மற்றும் 31 ஜனவரி 2020 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஈட்டியுள்ளதாக, ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (Centre for Railway Information Systems CRIS), தகவல் உரிமை விண்ணப்பத்திற்கான தனது பதிலில் கூறியுள்ளது. மேலும் தங்களது உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டை ரத்து செய்த பயணிகளிடமிருந்து ரூபாய் 4,684 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டை ரத்து செய்யும் பயணிகளிடம் இருந்து ரத்து செய்யும் கட்டணமாக ஒரு தொகையை பிடித்தம் செய்வதை ஒரு நிலையான நடைமுறையக இந்தியன் ரயில்வே பின்பற்றுகிறது. மேலும் அந்த பயண்ச்சீட்டுக்கான முழு தொகையும் திரும்ப செலுத்தப்படமாட்டாது.

மேலும் இந்த வருவாயை படுக்கை வசதி மற்றும் மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட வசதி உள்ள பயணச்சீட்டு எடுத்த பயணிகளிடம் இருந்து தான் வசூலித்துள்ளது. ஆன்லைன் மூலமாக ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு சமீப காலங்களில் ஒரு உறுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த தகவல் உரிமை பதில் மேலும் கூறுகிறது. அதே காலக்கட்டமான 1 ஜனவரி 2017 மற்றும் 31 ஜனவரி 2020க்கு இடைப்பட்ட காலத்தில் 145 கோடி பயணிகள் ஆன்லைன் மூலமாக ரயில் பயண சீட்டுக்களை முன்பதிவு செய்துள்ளனர். மேலும் 74 கோடி பயணிகள் பழைய முறையில் பயண்ச்சீட்டை முன்பதிவு செய்துள்ளனர் என அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment