புதிய ரயில் அட்டவணை: ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம்!

புதிய ரயில்வே கால அட்டவணையை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது.

புதிய ரயில் அட்டவணை : நடப்பாண்டிற்கான புதிய ரயில் அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதே போல் ரயில்கள் புறப்படும்ம் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது.இருப்பினும் புதிய ரயில்வே அட்டவணை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆகஸ்டு 14 வரை பழைய அட்டவணை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ரயில்வே கால அட்டவணையை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய கால அட்டவணை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் அட்டவணைப்படி, பல ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே போல் புதிய ரயில் அட்டவணையைப் புத்தகமாக அச்சிடும் பணி மும்பையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் இந்த அட்டவணை புத்தக வடிவில் ரயில் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய ரயில் அட்டவணையில் மாற்றப்பட்டுள்ள ரயில்களின் விபரங்கள்:

1. சென்னை எழும்பூர் – செங்கோட்டை விரைவு ரயில் இரவு 8.20 மணிக்கு பதிலாக, 8.40 மணிக்கு புறப்படும்.

2. சென்னை எழும்பூர் – திருச்சி சோழன் விரைவு ரயில் காலை 8.30 மணிக்கு பதிலாக 8.00 மணிக்கு புறப்படும்.

3. திருச்சி-நாகூர் விரைவு பயணிகள் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும்.

4. தாம்பரம் – செங்கோட்டை இடையே புதிய முன்பதிவில்லாத அந்தியோதயா விரைவு ரயில் தினசரி காலை 7 மணிக்கு இயக்கப்படும்.

5.நாகர்கோவில்-மும்பை விரைவு ரயில், தாம்பரம்-நெல்லை அந்தியோதியா ரயில், பாண்டியன் விரைவு ரயில், சிலம்பு விரைவு ரயில், திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

6. செங்கல்பட்டு – கச்சிகுடா விரைவு ரயில் மாலை 5.00 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும்.

7. கவுகாத்தி மற்றும் திப்ரூகர் விரைவு ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close