Advertisment

சுமியில் சிக்கித் தவித்த மாணவர்கள்: இன்று தாய்நாடு வருகை

பாகிஸ்தான், வங்கதேசம், துனிசியா நாடுகளை சேர்ந்த மாணவர்களும் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்த வாகனத்தில் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
New Update
சுமியில் சிக்கித் தவித்த மாணவர்கள்: இன்று தாய்நாடு வருகை

உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உள்ள சுமி பல்கலைக்கழகத்தில் சிக்கித் தவித்துவந்த இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் போலாந்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து இன்று நாடு திரும்புகின்றனர்.

Advertisment

சுமி பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தண்ணீர், உணவு, மின்சாரம் எதுவும் இல்லாமல் மாணவர்கள் தவித்து வந்தனர். தங்களை இந்திய அரசு எப்படியாவது மீட்க வேண்டும் என்று மாணவர்கள் உருக்கமாக வீடியோ வெளியிட்டனர்.

இதையடுத்து, அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தூதரகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதையடுத்து, தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் மாணவர்களை பேருந்து மூலம் அங்கிருந்து வெளியேற்றினர்.

தற்போது லிவிவ் நகரில் இருந்து போலந்துக்கு ரயிலில் அவர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்.

அங்கிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படவுள்ளனர்.

தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்க, உத்தரகாண்ட் & கோவாவுக்கு விரைந்த காங்கிரஸ், பாஜக தலைவர்கள்

இந்தியத் தூதர் பார்த்த சத்பதி ரயிலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து இந்தியத் தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 600 இந்திய மாணவர்களுடன் லிவிவ் நகரில் இருந்து ரயில் புறப்பட்டது. போலந்து எல்லையில் இருந்து இந்திய விமானத்தில் அவர்கள் தாய்நாடு திரும்புவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ட்வீட்டில் உக்ரைன் அதிகாரிகள் ரயில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். மாணவர்களின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போலந்து எல்லைக்கு சென்றுகொண்டிருப்பதாக இந்திய மாணவர் மஹ்தப் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் இதுவரை 17,100 இந்தியர்களை மத்திய அரசு உக்ரைனில் இருந்து மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், துனிசியா நாடுகளை சேர்ந்த மாணவர்களும் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்த வாகனத்தில் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment