Advertisment

தாய்லாந்து சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் விபத்தில் பலி - உடலைக் கூட வாங்க முடியாமல் தவிக்கும் குடும்பம்

பெங்களூரில் உள்ள அவரது ரூம்மேட் புதன்கிழமை ஃபூகெட் (தாய்லாந்து) நகரில் சாலை விபத்தில் இறந்ததைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்தார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் பாஸ்போர்ட் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian techie dies in Thailand Centre MP govt step in to bring back body - பணி நிமித்தம் தாய்லாந்து சென்ற இந்திய பெண் விபத்தில் பலி

Indian techie dies in Thailand Centre MP govt step in to bring back body - பணி நிமித்தம் தாய்லாந்து சென்ற இந்திய பெண் விபத்தில் பலி

இந்திய சாஃப்ட்வேர் இன்ஜினியர் தாய்லாந்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, பாஸ்போர்ட் இல்லாததால், அவரது உடலை கொண்டு வர குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

Advertisment

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரக்யா பலிவால் (29). பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த பிரக்யா நிறுவனத்தின் பயிற்சிக் கூட்டத்திற்காக தாய்லாந்து சென்றிருக்கிறார். இந்தியாவில் இருந்து வேறு சிலரும் அவருடன் சென்றிருந்த நிலையில், அங்கு நடந்த பயங்கர கார் விபத்து ஒன்றில் பிரக்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை உடனடியாக பிரக்யாவின் தோழி அவருடைய குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவரது உடல் புக்கட்டில் உள்ள படாங் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பிரக்யாவின் குடும்பத்தினர் யாருக்கும் பாஸ்போர்ட் இல்லாததால் தாய்லாந்து சென்று அவருடைய உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிரக்யாவின் சகோதரர் எஸ் பி பாலிவால், "எனது சகோதரி பிரக்யா பாலிவால் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக இருந்தார். பெங்களூரில் உள்ள அவரது ரூம்மேட் புதன்கிழமை ஃபூகெட் (தாய்லாந்து) நகரில் சாலை விபத்தில் இறந்ததைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்தார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் பாஸ்போர்ட் இல்லை. எனவே, உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ அலோக் சதுர்வேதி மற்றும் மாவட்ட அதிகாரிகளின் உதவியை நாங்கள் கோரியுள்ளோம்" என்றார்.

இதைத் தொடர்ந்து,  சதுர்வேதி முதலைமைச்சர் கமல்நாத்திடம் தகவல் தெரிவித்தார். 'குடும்பத்தினருக்கு தேவை என்றால் உடனடி பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "பாங்காங்கில் உள்ள இந்திய தூதரகம் பிரக்யாவின் உடலை இந்தியா கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" எனக் கூறியுள்ளார்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment