Advertisment

இந்தியாவின் ஒரே ஆறுதல் - குணமடைந்தோர் விகிதம் 50.60 சதவீதமாக அதிகரிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India's recovery rate, corona recovery raid, corona in india, corona in tamil nadu, கொரோனா, குணமடைந்தோர் விகிதம் 50.60

India's recovery rate, corona recovery raid, corona in india, corona in tamil nadu, கொரோனா, குணமடைந்தோர் விகிதம் 50.60

கடந்த 24 மணி நேரத்தில் 8,049 கோவிட-19 நோயாளிகள் உடல் நலம் பெற்றுள்ள நிலையில், குணமடைந்தோர் விகிதம் 50 சதவீதத்துக்கும் அதிகமாகியுள்ளது.

Advertisment

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம்கூறுகையில், "மொத்தம் 1,62,378 நோயாளிகள் இதுவரை கொவிட்-19 நோயிலிருந்துநலம் பெற்றுள்ளனர். தற்போது, குணமடைந்தோர் விகிதம் 50.60 சதவீதமாக உள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் பாதி பேர் குணமடைவதையே இது காட்டுகிறது. உரிய நேர தொற்றுக் கண்டறிதல், முறையான மருத்துவ சிகிச்சை மேலாண்மை ஆகியவை நோயாளிகள் குணமடைவதற்குக் காரணமாகும். தற்போது, 1,49,348 பேர் மருத்துவக் கணிகாணிப்பின் கீழ் உள்ளனர்.

ரெம்டெசிவைர் மருந்து: உற்பத்திக்கான உரிமம் கிடைப்பதில் தாமதம்

கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தொற்று கண்டறிவதற்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) சோதனைத் திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 646 ஆகவும், தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 247 ஆகவும் (மொத்தம் 893) அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,51,432 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 56,58,614 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment