Advertisment

உடைக்கும் பணிக்கு தயாரானது ஆலங்; இறுதி பயணத்தை முடித்தது ஐ.என்.எஸ் விராட்!

இந்த கப்பல் 1959ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் கப்பற்படையில் எச்.எம்.எஸ் ஹெர்மெஸ் என்ற பெயரில் முதன்முதன்மையாக பயன்பாட்டிற்கு வந்தது.

author-image
WebDesk
New Update
INS Viraat set for dismantling at Alang yard

INS Viraat set for dismantling at Alang yard : இந்த கப்பல் 1959ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் கப்பற்படையில் எச்.எம்.எஸ் ஹெர்மெஸ் என்ற பெயரில் முதன்முதன்மையாக பயன்பாட்டிற்கு வந்தது. பிரிட்டிஷ் ராயல் கடற்படை பயன்படுத்திய போர்கப்பலை இந்திய கப்பற்படை வாங்கி அதி நவீன வசதிகளுடன் புதுப்பித்து ஐ.என்.எஸ் விராட்டாக இந்தியாவிற்கு அறிமுகம் ஆனது இந்த கப்பல்.

Advertisment

22,600 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பலில் 26 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும். 1987ம் ஆண்டு இந்திய கப்பற் படையில் இணைந்த இந்த கப்பல் 30 ஆண்டுகள் சேவையில் இருந்தது. 2017ம் ஆண்டு இந்த கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் கடந்த 19ம் தேதி மும்பையில் இருந்து தன்னுடைய இறுதி பயணத்தை துவங்கியது.

இந்திய கப்பற்படையில் மகத்தான சேவை புரிந்த ஐ.என்.எஸ் விராட் விமானம் தாங்கி கப்பலை உடைக்கும் பணி ஆரம்பமானது. மும்பையில்...

Posted by IETamil on Monday, 28 September 2020

குஜராத்தில் அமைந்திருக்கும் ஆலங் துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட்ட இந்த கப்பலின் பாகங்கள் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ஆலங் துறை முகத்தில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டது. இதில் பணியாற்றிய நபர்கள் இதற்கு பிரியா விடை கொடுத்தனர். தற்போது கப்பலின் பாகங்களை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கப்பலை உடைத்து எடுக்கப்படும் பாகங்கள் பிற்கு விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. இந்த பணிக்கு மட்டும் ஆகும் செலவு ரூ. 38 கோடியாகும்.

உலகின் மிக நீளமான விமானம் தாங்கி கப்பல் என்ற கின்னஸ் ரெக்கார்டை வைத்திருக்கும் இந்த கப்பல், உலகின் மிகப்பெரிய கப்பல் உடைக்கும் தளமான ஆலங் துறைமுகத்தில் இருந்து 3000 அடிக்கு அப்பால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment