irctc booking : வெளியூர் ரயில் பயணங்களுக்கு ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் புக் செய்யப்படும் போது நீங்கள் சில போலி முகவர்களால் ஏமாற்றப்படவும் வாய்ப்புண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, டிக்கெட்டை புக் செய்யும்போது பணம் செலுத்த வங்கிகளின் விவரங்களை குறிப்பிட வேண்டும். அப்போது மர்ம நபர்களால் உங்களது வங்கி அக்கவுண்ட் குறித்த விவரங்கள், பாஸ்வேர்ட்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கும் படி வங்கி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் புதுப்புது சேவைகளை புகுத்தி வரும் நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பமசங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு ஐஆர்சிடிசி தளத்தில் மட்டும் லட்சக்கணக்காணோர் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றன. மிகவும் சுலபமாக இதன் நடைமுறை உள்ளதால் மக்களால் எளிதில் இதனை பயன்படுத்த முடிகிறது.
உஷார் மக்களே!
இந்நிலையில், ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக சில நூதனமான பணம் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை உடனே தடுத்து நிறுத்த இந்தியன் ரயில்வேஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்குள் வேறு யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஐஆர்சிடிசி தளங்கள் மூலம் பயணிகள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் டிக்கெட் புக் செய்யும் போது உங்கள் வங்கிகளின் பாஸ்வேர்ட் வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் கேட்கப்பட்டால் அதை உறுதி செய்த பின்பு பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போன் கால் மூலம் அழைப்பு வந்து நாங்கள் ஐஆர்சிடிசி தளத்தின் ஊழியர்கள் பேசுகிறோம் உங்கள் டிக்கெட் புக்கிங் உறுதி செய்வதற்கான வங்கி விவரங்களை கூறுங்கள் என்ற போலி அழைப்புகள் வந்தாலும் அதனை நிராகரிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் ஐஆர்சிடிசி தளம் மொபைல் எண்ணுக்கு போன் கால் மூலம் அழைப்புகளை விடாது என கூறப்பட்டுள்ளது.