அலைச்சல் இல்லாமல் ஜாலியாக கோவாவை சுற்றி வர IRCTC புதிய ஏற்பாடு

IRCTC Offers Glorious Goa Tour Package for 3 Night 4 Days : இந்த பயணம் மேற்கொள்பவர்கள் வட மற்றும் தெற்கு கோவாவில்...

Goa Tour Package for 3 Night 4 Days by IRCTC : சுற்றுலா என்றாலே இந்தியா முதல் வெளிநாட்டினர் அனைவரின் மனதிலும் வரும் முதல் எண்ணம் கோவா தான்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தளங்களில், கோவா அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு இடம். முன்பெல்லாம், பார்ட்டி, விடுமுறை, அல்லது வெகேஷன் என்றால் தான் கோவா செல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம், திருமணம் என்றாலே கோவாவில் தான் என்றளவுக்கு இளைஞர்களின் கவனம் மொத்தத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.

இத்தகைய கோவாவை நீங்களும் ஒரு முறை சுற்றிப் பார்க்கலாம். அதற்காக ஐஆர்சிடிசி புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘குளோரியஸ் கோவா’ என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் 3 இரவுகள் 4 நாட்கள் கோவாவில் தங்கி சுற்றிப் பார்க்கலாம்.

IRCTC Goa Tour Package: ஐஆர்சிடிசி கோவா சுற்றுலா பேக்கேஜ்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடங்கும் இந்த சுற்றுலாவில், மிராமர் பீச், பழமையான கோவா கிரிஸ்துவ ஆலையங்கள், மங்கேஷி கோவில், அகுவாடா கோட்டை மற்றும் பல இடங்களை சுற்றிப்பார்க்கலாம். மேலும் பயணிகள் அனைவரும், பிரம்மாண்ட கப்பல் மூலம், மாண்டோவி நதி, அஞ்சுனா கடற்கரை மற்றும் கலங்குட்டா கடற்கரை உள்ளிட்ட இடங்களை காணலாம். இந்த பயணம் மேற்கொள்பவர்கள் வட மற்றும் தெற்கு கோவாவில் உள்ள சுற்றுலா தளங்களை சுற்றுப்பார்க்கலாம்.

Ticket Cancellation Rules : ஐஆர்சிடிசி -யில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

ஐஆர்சிடிசி பொறுத்த வரை, இந்த பேக்கேஜின் கீழ் ரயில் கட்டணம், ரயில் நிலையத்தில் இருந்து தங்கும் இடத்திற்கு பயணிக்கும் செலவு, 3 காலை உணவுகள் மற்றும் 2 இரவு உணவு, தங்கும் இடத்திற்கான கட்டணம், ஏசி பேருந்து கட்டணம், சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்கும் செலவு உள்ளிட்டவைகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பயணத்திற்கான டிக்கெட் செலவை ஐஆர்சிடிசி இணையத்தில் பதிவு செய்து கட்டலாம்.

ஒரு நபருக்கான கட்டணம் விவரம் : 

IRCTC

டிக்கெட் ரத்து செய்ய வேண்டுமென்றால்: 

தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த சுற்றுலா பயணம் உங்களால் மேற்கொள்ள முடியவில்லை என்றால், ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் ரத்து செய்துக் கொள்ளலாம்.

IRCTC

உங்களின் டிக்கெட்டை ரத்து செய்ய, இணையத்தளத்திற்குள் உங்களுக்காக கணக்கு விவரங்கள் வைத்து லாக் இன் செய்யவும். நீங்கள் தேர்வு செய்த சுற்றுலா பயணத்திற்கு என தனியாக ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும், அதனை பதிவு செய்யுங்கள். பிறகு அதில் கேன்சல் (ரத்து) என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் கேன்சல் செய்யலாம்.

இந்த ரத்து அனைத்தும், www.irctctourism.com என்ற இணையத்தில் மட்டுமே செய்ய முடியும். PRS கவுண்டர்களில் செய்ய இயலாது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close