Advertisment

IRCTC Goa Package: வெறும் 400 ரூபாய் இருந்தால் போதும்... முழு கோவாவை சுற்றிப் பார்க்கலாம்

IRCTC Offering Goa Tour for Just Rs 400 : கோவா செல்ல விரும்புபவர்களுக்கு புதிய சலுகை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC Goa Package

IRCTC Goa Package

IRCTC : நியூ இயர் என்றாலே பார்ட்டி தான். அதுவும் பார்ட்டிகே பெயர்போன கோவா செல்ல பலரும் இந்த சமயம் துடித்துக் கொண்டிருப்பார்கள்.

Advertisment

அதிலும் வருமானத்தையே ஒரு காரணமாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் கோவா பயணம் தள்ளிப்போடுபவர்களுக்குத்தான் இந்த சூப்பர் ப்ளான். கோவா நகரினை வெறும் 400 ரூபாயில் சுற்றி பார்க்கும் வகையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

IRCTC : 400 ரூபாய் கோவா பயணம் சலுகை

'HOP ON HOP OFF GOA BY BUS' போருந்து சலுகையின் மூலம் தனி நபர் ஒருவர் ரூ.400 செலவில் கோவாவை சுற்றி பார்கலாம். இந்த திட்டத்தின் படி தனி நபர் ஒருவர் வடக்கு கோவா (அ) தெற்கு கோவாவை ரூ.400-க்கு ஒருநாள் பயணமாக சுற்றிப்பார்கலாம் எனவும், இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.700 செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டள்ளது.

IRCTC

கோவாவை சுற்றுலா சிறப்பு பேருந்து மூலம் பயணிகள் கண்டு ரசிக்க இந்த அதிரடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, தெற்கு கோவா திட்டத்தில் பயணிப்பவர்கள் டோனா பவுலா, கோவா அறிவியல் அருங்காட்சியகம், மீராமர் பீச், காலா அகாடமி, பகவான் மகவேர் கார்டன், பனாஜி மார்க்கெட், கேசினோ பாயிண்ட், நதி படகு குரூஸ் & பழைய கோவா (பசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் (புனித பிரான்சிஸ் சேவியர்), சீ கதீட்ரல், செயின்ட் கேத்தரின் சாப்பல், வைசிராய், ஏ.எஸ்.ஐ அருங்காட்சியகம் மற்றும் செயின்ட் அகஸ்டின்) ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.

IRCTC

வட கோவாவிற்கு வருகை தரும் பயணிகள் ஆகுண்டா கோட்டை, சின்கர்னிம் பீச் / கோட்டை, கொன்டோலிம் பீச், செயின்ட் ஆந்தோனி சேப்பல், செயின்ட் அலெக்ஸ் சர்ச், கலங்கூட் பீச், பாகா பீச், அஞ்சூனா கடற்கரை, சாப்போரா கோட்டை மற்றும் வாகக்டர் பீச் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.

எப்பவும் வெயிட்டிங் லிஸ்ட் வருகிறதா? உங்கள் டென்ஷனை குறைக்க வந்தாச்சு புதிய செயலி

இந்த சலுகை பயணத்தை முன்பதிவு செய்யும் நபர்கள், தங்களது பயணத்திற்கு 4 நாள் முன்னதாக முன்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 4 நாள்களுக்கு முன்னதாக குறிப்பிட்ட நாளின் பயணத்திற்கான முன்பதிவு முடக்கப்படும் எனவும் IRCTC குறிப்பிட்டுள்ளது. முன்பதிவு தகவலின் அடிப்படையில், சுற்றுலா பயணத்தில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல், பயண விவரங்கள் மின்னஞ்சல் வழியாக பயனிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

குடும்பத்துடன் அந்தமான் செல்ல வேண்டுமா ? சுற்றுலாத்துறையின் அசத்தல் பேக்கேஜ்கள் இதோ...

மேலும் படிக்க : ஆக்ரா போகலாம் வாங்க... 2550 ரூபாய் இருந்தால் போதும்

Goa Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment