Advertisment

ரயில் உணவுத் தரம் முக்கியம் பாஸ்! ஐஆர்சிடிசின் சபாஷ் நடவடிக்கைகள்

Indian Railways food menu revised :

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
irctc food menu, indian railway

irctc food menu, indian railway

Indian Railways Food On Trains : விரைவில், இந்திய ரயில்வே பயணிகள், தங்கள் ரயில் பயணங்களில் சிறந்த உணவை எதிர்பார்க்கலாம். ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் உணவு சேவைகளின் தரத்தை மேம்படுத்த சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்வே வாரியம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி  ராஜதானி, சதாப்தி, டுரான்டோ & மெயில்/எக்ஸ்பிரஸ் ஆகயவற்றில் ஐஆர்சிடிசி-ன் உணவின் தரத்தை மேம்படுத்தும் நோக்கமாக உணவுப் பட்டியலை திருத்தியிருக்கிறது. இதனால், இதில் விற்கப்படும் உணவின் விலையும்  அதிகரிக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

Advertisment

இதையும் தாண்டி, ஐஆர்சிடிசி உணவு தரத்தை மேம்படுத்துவதற்காக எடுத்த சில நடவடிக்கைகள் பின்வருமாறு:

24 ஆன்-போர்டு கேட்ரிங் சர்வீஸ் ப்ரொவைடர்   ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டன:

பயணிகளுக்கு சிறந்த உணவு சேவையை வழங்குவதற்காக,   ஐஆர்சிடிசி 358  ஆன்-போர்டு கேட்ரிங் சர்வீஸ் ப்ரொவைடர்களிடம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு 47 ஒப்பந்த காரர்களிடம் உணவின் தரத்தையும், சேவையையும் மேம்படுத்த அறிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், 23 சர்வீஸ் ப்ரொவைடர் உரிமத்தை ரத்து செய்திருக்கிறது.

வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!- ietamil வீடியோ 

கேட்ரிங் மேற்பார்வையாளரை நியமித்தல் : 

கண்காணிப்புகளை அதிகரிப்பதற்கும், ரயில்களில் உணவு சேவைகளின் தன்மையை நிகழ்நேர அடிப்படையில் சரிபார்க்கவும், ஐ.ஆர்.சி.டி.சி தனது கேட்டரிங் மேற்பார்வையாளர்களை நியமிக்கிறது. இதனால்,  பயனாளிகளின் குறைகளை உடனடியாக  நிவர்த்தி செய்யும் என்று ஐஆர்சிடிசி நம்புகிறது.

கேட்டரிங் சேவைகளில் மூன்றாம் தரப்பு தணிக்கை: 

பயணிகள் ரயில்கள், ரயில்வே சமையலறைகள்,  உணவு பிளாசாக்கள் போன்றவைகளில் சில மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்து வருகிறது.  உணவு தரம் மற்றும் சுகாதார நிலைகளை கண்காணிக்க இது பெரிதும் உதவிகிறது .

தனது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து  சமையலறைகளிலும் சி.சி.டி.வி கேமராக்களை ஐஆர்சிடிசி நிறுவியுள்ளது. ரயில்களில் வழங்கப்படும்  உணவை மக்கும்  பொருளைக் கொண்டு பேக்கேஜிங் செய்வதையும் உறுதிபடுத்தியுள்ளது.

Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment