தாயின் நினைவாக மகள்களுக்கு பெயர் சூட்டிய இரோம் ஷர்மிளா...

தன்னுடைய மகள்கள் பனியை போல் அமைதியாக இருக்க வேண்டும் என்று இந்த பெயர் சூட்டப்பட்டதாம்.

Irom Sharmila Daughters’ Names : மணிப்பூர் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் இன்றும் நிலுவையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் 1958-க்கு எதிராக 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார். மேலும் பலமுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர் இவர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு உண்ணாவிரதத்தை கைவிட்டு, இயல்பு வாழ்விற்கு திரும்பினார். 2017ம்  ஆண்டு மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு கோவாவில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டெஸ்மாண்ட் கௌடின்ஹோவினை திருமணம் செய்தார். பிறகு இந்த தம்பதியினர் கொடைக்கானலுக்கு குடி பெயர்ந்தனர்.

சிசேரியன்  மூலம் ஆரோக்கியமான இரண்டு குழந்தைகளை பெற்ற இரோம்

46 வயது நிரம்பிய இரோம் ஷர்மிளா கர்ப்பம் அடைந்த பிறகு, இவர்கள் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். பிரசவத்திற்காக, மல்லேஸ்வரம் பகுதியில் இருக்கும் க்ளௌட்நைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இரோம் ஷர்மிளா.

நேற்று காலை 09:20 மணிக்கு சிசேரியன் மூலமாக இரண்டு குழந்தையையும் பெற்றெடுத்தார் ஷர்மிளா. அந்த குழந்தைகளுக்கு நிக்ஸ் சகி (Nix Sakhi) என்றும், ஆட்டோம்ன் தாரா (Autumn Tara) என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

நிக்ஸ் என்றால் லத்தீன் மொழியில் பனி என்று அர்த்தம். இதனை ஷர்மிளாவின் கணவர் தேர்வு செய்த பெயர். சகி என்பது ஷர்மிளாவின் தாயார் பெயர் (இரோம் சகி). சமீபத்தில் இறந்த தன் தாயின் நினைவாக இந்த பெயரை சூட்டியுள்ளார்கள். தன்னுடைய மகள் பனியை போல் அமைதியாக இருக்க வேண்டும் என்று இந்த பெயர் சூட்டப்பட்டதாம்.

இரண்டாவது பெயர் ஆட்டோம் தாரா, புத்தரின் பெண் அவதாரம் என்று நம்பப்படும் ஒரு பெண்ணின் பெயரை சூட்டியிருப்பதாக அவர் அழைபேசி வாயிலாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு கூறினார். இரண்டு குழந்தைகளும் 2.1 கிலோ எடையுடன் பிறந்துள்ளதாக ஷர்மிளாவின் மருத்துவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : இரோம் சர்மிளாவுக்கு திருமணம்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close