ஆண்டாண்டு காலமாக ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதி கிடையாதா?

கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளில் இருக்கும் ஐயப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது

சபரிமலை ஐயப்பன் கோவில் பெண்கள் வழிபாடு :  ஆதிகாலத்தில் இருந்தே பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா சபரிமலையில் ? சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று ஒரு சாரர் தொடர்ந்து மறுப்பு கூறிவந்தாலும், உண்மையாகவே கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டாண்டு காலமாக பெண்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

ஏன் அனுமதி மறுப்பு ?

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் சுவாமி பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் ஒரு கடவுள் என்ற ஐதீகம் ஆன்மிகவாதிகளால் நம்பப்படுகிறது. 10 முதல் 50 வயதிலான பெண்கள் மாதாந்திர விலக்கு ஆகும் காரணத்தால் அது புனிதமற்ற தன்மை என்றும் அதனால் கோவிலில் தீட்டு உண்டாகக் கூடும் என்றும் ஐயப்பனின் பிரம்மச்சரியத்திற்கு ஒவ்வாத  செயல் என்றும் கற்பிக்கப்பட்டு வந்தது. அதனால் தான் குறிப்பிட்ட வயது பெண்கள் அந்த கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

ஐயப்பன் கோவில் – ஐயன் கோவில்

தமிழகத்தின் கிராமங்கள் தோறும் ஐய்யனார் சாமிகள் காவல் தெய்வமாக இருப்பதைப் போலவே ஆரியங்காவு பகுதியில் இருந்த ஐயப்பன் கோவிலும் முன்னொரு காலத்தில் எல்லை காவல் தெய்வமாக, சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்த தெய்வமாக இருந்தது. வழிபாடுகளில் இரண்டு கடவுள்களுக்கும் அதிக அளவில் ஒற்றுமைகள் இருக்கின்றன. பழங்குடிகளின் ஊர்காவல் தெய்வமாக இருந்த இக்கோவில் பிற்காலத்தில் உயர் ஜாதி மலையாள இந்துக்களாலும், பந்தளம் ராஜ குடும்பத்தாலும் பராமரிக்கப்பட்டு, அக்கோவிலின் நிர்வாகத்தினை ஏற்று நடத்தத் தொடங்கினார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும்  கேரளத்தில் இருக்கும் பல்வேறு ஐயப்பத் திருத்தலங்களில் ஐயப்பன் திருமணமான கடவுளாகவே காட்சி அளிக்கிறார். உதாரணம் : அச்சன்கோவில். கோவை போன்ற கேரளத்தை ஒட்டிய தமிழக பகுதிகளில் இருக்கும் ஐயப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோவில் பெண்கள் வழிபாடு – எழுத்தாளார் என்.எஸ். மாதவன்

ஆனால் சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது என 1972ம் ஆண்டு தான் தடையே விதித்தார்கள். அதற்கு முன்பு வரை ஆண்களைப் போலவே பெண்களும் சென்று ஐயப்பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1972ல் தடை விதிக்கப்பட்டாலும் பெரிதாக நடைமுறைப்படுத்தவில்லை.

1986ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்ப்படம் அந்த கோவில் சன்னிதானத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 7500 கட்டணத்தையும் பெற்றிருக்கிறது தேவசம் போர்ட்.

மேலும் படிக்க மண்டல பூஜைக்காக இன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது… வழிபட திரண்ட பெண்கள் 

சபரிமலை ஐயப்பன் கோவில் பெண்கள் வழிபாடு – கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு

1990ம் ஆண்டு போடப்பட்ட பொதுநல வழக்கின் காரணமாகவே 10-50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1993ம் ஆண்டு பெண்கள் ஆலயத்திற்குள் நுழையக்கூடாது என ஆணை பிறப்பித்தது கேரள உயர்நீதிமன்றம். அதன் பின்னாள் இருந்தே பெண்கள் இக்கோவிலுக்கு வருவதில்லை. ஆனால் ஆதிகாலத்தில் இருந்தே சோறுண்ணு சடங்கிற்காக பெண்கள் இந்த கோவிலிற்கு வருவது வழக்கமான ஒன்றாகும்.

1939ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ராணியாக இருந்தவர் ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்தியிருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. மேலும் படிக்க தடைகளை தகர்த்தெறிந்து கோவிலுக்குச் செல்வேன் என்று சொல்லும் ரேஷ்மா.

முன்னாள் பிரதமரின் செக்கரட்ட்ரி டி.கே.ஏ நாயரின் அனுபவம் :

1991ம் வருடத்திற்கு முன்பு வரை குறிப்பிட்ட வயது பெண்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்ற ஒரு சட்டம் கிடையாது. இந்தியாவில் இருக்கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் செக்கரட்ரியாக பணியாற்றி வந்த டி.கே.ஏ நாயர் இது குறித்து கூறுகையில் “எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முறையாக சபரி மலை சென்ற போது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன்.

அன்று எடுத்துக் கொண்ட போட்டோ இன்றும் எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார். அவர் காட்டிய அந்த போட்டோவில் ஒரு இளம்பெண் கருவறையில் இருக்கும் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதாக இருந்தது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close