Advertisment

“சராசரியாக இருப்பதில் தவறேதும் இல்லை” தான் படித்த பள்ளிக்கு கடிதம் எழுதிய வருண் சிங்

செப்டம்பர் மாதம் எழுதிய கடிதத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் சொந்த அனுபவத்தை மாணவர்களிடம் பதிவு செய்துள்ளார். இது அவர்களுக்கு உத்வேகமாக அமையும் என்று, குறிப்பாக மிகவும் ஹைப்பராக இருக்கும் இந்த உலகில் சராசரியாக உணரும் மாணவர்களுக்கு இது உதவும் என்று வருண் இக்கடிதத்தை எழுதியுள்ளார்

author-image
WebDesk
New Update
Group captain Varun Singh

 Pallavi Singhal

Advertisment

Group captain Varun Singh : ”Its is okay to be mediocre” - சாதரணமாக / சராசரியாக இருப்பதில் தவறொன்றும் இல்லை - இது தான் தமிழகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் தப்பித்த குரூப் கேப்டன் தான் படித்த பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு எழுதியது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னுடைய பள்ளி தலைவருக்கு எழுதிய கடிதம் மூலம் இந்த செய்தியை அங்கே படிக்கும் மாணவர்களுக்கு அனுப்பியுள்ளார் வருண் சிங். தற்போது பெங்களூரில் அமைந்திருக்கும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வருண்.

செப்டம்பர் மாதம் எழுதிய கடிதத்தில் தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் சொந்த அனுபவத்தை மாணவர்களிடம் பதிவு செய்துள்ளார். இது அவர்களுக்கு உத்வேகமாக அமையும் என்று, குறிப்பாக மிகவும் ஹைப்பராக இருக்கும் இந்த உலகில் சராசரியாக உணரும் மாணவர்களுக்கு இது உதவும் என்று வருண் இக்கடிதத்தை எழுதியுள்ளார். 12ம் வகுப்பில் முதல் டிவிஷனில் எப்போதாவது மதிப்பெண் பெறும், விளையாட்டு மற்றும் இதர திறன்சார் நடவடிக்கைகளிலும் சராசரியாகவே தான் இருந்திருக்கிறேன். ஆனாலும் விமானங்கள் மற்றும் ஏவியேசன் மீதான என்னுடைய இலக்கில் தெளிவான நோக்கம் இருந்தது என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”என்.டி.ஏவிற்கு சென்ற நான் ஆஃபிசர் கேடட்டாக தேர்வு செய்யப்பட்டேன். என்.டி.ஏவில் பணியாற்ற போதுமான அளவு விளையாட்டு மற்றும் கல்வியில் நான் சிறப்பாக செயல்படவில்லை” என்று எழுதியுள்ளார் வருண். பிறகு ஏ.எஃப்.ஏ.வில் இணைந்த போது அவருடைய கனவு மற்றும் இலக்கு என்ன என்பதை அறிந்து கொண்டார் என்றும் ஆனாலும் எப்போதும் சராசரியாகவே தான் நான் இருப்பேன் என்ற எண்ணம் என் மீது எனக்கே போதுமான நம்பிக்கையை தரவில்லை என்றும் எழுதியுள்ளார் குரூப் கேப்டன்.

பிறகு நான் விமான போர்ப்படையின் லெஃப்டினன்டாக நியமிக்கப்பட்டேன். என்னுடைய மனதையும், இதயத்தையும் முழு ஈடுபாட்டுடன் இதில் செயல்படுத்தினால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பினேன். ”பாஸானால்” போதும் என்று உழைப்பதற்கு பதிலாக என்னில் சிறந்த பங்களிப்பை கொடுக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் பணியேற்றினேன்.

பறப்பதாக இருந்தாலும் சரி, மற்ற விஷயங்கள் என்றாலும் சரி , ஒவ்வொரு பணியையும் தனது திறமைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்தபோது என்னுடைய வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்தன. மதிப்புமிக்க மற்றும் கடுமையான சோதனை பைலட் பாடநெறிகளை கற்க முன்வந்தேன் என்று அந்த கடிதத்தில் கூறினார். 4 படிநிலைகளில் நடத்தப்படும் சோதனைகளில் கலந்து கொண்ட 59 விமானிகளில் 7 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். அதில் அவரும் ஒருவர். பிறகு அவருக்கு தேஜஸ் விமானப்படை பிரிவு ஒதுக்கப்பட்டது. அந்த பிரிவுக்கு செல்வதற்கான சீனியாரிட்டியை அவர் கடந்திருந்தாலும் அவருக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

2020ம் ஆண்டு அவர் இயக்கிய விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இத்தகைய சூழலில் விமானத்தில் இருந்து குதித்து உயிரை காப்பாற்றிக் கொள்ள உத்தரவுகள் இருந்த போதிலும் சில கணக்கிடப்பட்ட ரிஸ்க்குகளை எடுத்த அவர் விமானத்திற்கும், பொதுமக்களுக்கும் எந்தவிதமான சேதாரமும் ஏற்படாமல் விமானத்தை தரையிறக்கினார். ஆகஸ்ட் 15ம் தேதி அன்று அவருக்கு சவுரிய சக்ரா விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு.

மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த கடிதம் வாசிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார் வருண். “சராசரியாக இருந்தால் சரி தான். அனைவராலும் பள்ளிகளில் சிறந்து விலங்கிவிட இயலாது. அனைவராலும் 90 மதிப்பெண்கள் பெற்றுவிட இயலாது. நீங்கள் அப்படி செயல்பட்டால் அது மிகப்பெரிய சாதனை. பாராட்டுதலுக்குரியது. நீங்கல் அப்படி பெறவில்லை என்றால் நீங்கள் உங்களை மீடியோக்கர் என்று நினைத்துவிட வேண்டாம். பள்ளிகளில் நீங்கள் அப்படி இருந்தால் வாழ்வில் நீங்கள் அப்படி தான் இருப்பீர்கள் என்று அர்த்தம் இல்லை. இசை, ஓவியம், இலக்கியம், கிராஃபிக்ஸ் என்று உங்களுக்கான அழைப்பிற்காக காத்திருங்கள். எந்த பணியை நீங்கள் செய்தாலும் முழுமனதாக உங்களின் சிறந்த பங்களிப்பை கொடுங்கள். படுக்கைக்கு செல்லும் முன் இதில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தோடு செல்ல வேண்டாம்” என்றும் அவர் கூறினார்.

அனைத்து மாணவர்களாலும் படிக்கப்பட வேண்டிய கடிதம் அது. அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு அவர் நன்றி கூறினார். அனைத்து சரியான விசயங்களையும் இந்த கடிதம் கூறுகிறது. மாணவர்கள் அவர்களின் இதயம் என்ன சொல்கிறதோ அதனை பின்பற்ற வேண்டும். மதிப்பெண்கள் எல்லாம் ஒன்றும் இல்லை என்று அந்த பள்ளியின் தலைவர் கேப்டன் சுமன் சிங் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bipin Rawat Varun Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment