வேலை செய்யாத ஃபேக்ஸ் மிசின்... ஆளுநர் மாளிகையை கிண்டல் செய்து ட்வீட் செய்த காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள்

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மாளிகையில் புதிய ஃபேக்ஸ் மிசின் அவசியமாக தேவைப்படுகிறது - உமர் அப்துல்லா

J-K assembly dissolved : ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பிடிபிக்கு அளிக்கப்பட்ட ஆதரவினை பாஜக வாபஸ் வாங்கியது. அதனைத் தொடர்ந்து, அங்கு மெகபூபா முஃப்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் ஆட்சி நடைபெற்று வந்தது.  இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க மெஹபூபா முஃப்தி கோரிக்கை விடுத்திருந்தார்.

J-K assembly dissolved : ட்விட்டரில் ராஜ்பவனை கிண்டல் செய்த முன்னாள் முதலமைச்சர்கள்

இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் சஜ்ஜித் லோனேவும் உரிமை கோரியிருந்தார். முஃப்தி தன்னுடைய கோரிக்கையினை ஃபேக்ஸ் மூலம் அனுப்பியிருந்தார். அதே போல் சாஜத் லோன் தன்னுடைய கோரிக்கையினை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருந்தார். அதனை பார்த்துவிட்டார் என்பதற்கான ப்ளூடிக் விழுந்தும் உள்ளது. ஆனால் 87 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

ஆளுநரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் தோல்வியுற்ற மெகபூபா முஃப்தி இறுதியில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கோரிக்கையை வைத்து, ஆளுநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து “Hope you see it” என்று 8.16 மணிக்கு பதிவிட்டிருக்கிறார்.

20 நிமிடங்கள் கழித்து தன்னுடைய பங்கிற்கு சாஜத் லோனும் ஆட்சி அமைக்கக் கோரி தன்னுடைய பி.ஏ மூலமாக வாட்ஸ்அப் அனுப்பிய திரையை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஓகே என்று ஆளுநரின் பி.ஏவிடம் இருந்து ஓ.கே என்ற பதிலும் வந்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் அதற்கு கீழே ஆளுநர் மாளிகையில் வேலை செய்யதாக ஃபேக்ஸ் மிஷினைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் வேலை செய்யாத பேக்ஸ் மிசினை வைத்திருக்கும் ஆளுநர் மாளிகையா என்று கேள்வி எழுப்பிய விதமாக ட்வீட் செய்திருந்தார் மெஹ்பூபா.

ஃபேக்ஸ் மிஷின் வேலை செய்யாததை கேலியாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மாளிகையில் தற்போது புதிய ஃபேக்ஸ் மிசின் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு இடைப்பட்ட தருணத்தில் ராஜ்பவனில் இருந்து சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக கூறி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. அப்போதும் கூட காஷ்மீர் ராஜ் பவனில் வேலை செய்யும் ஃபேக்ஸ் மிசினில் இருந்து வரும் கடிதங்கள் யாவும் நேரடியாக ஷ்ரட்டருக்கு செல்வதைப் போல் ஒரு ஜிஃப் இமேஜினை பதிவு செய்திருந்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close