Advertisment

துணை குடியரசு தலைவர் தேர்தல்; பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தன்கர் அறிவிப்பு

துணை குடியரசு தலைவர் தேர்தல்; பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தன்கர் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
துணை குடியரசு தலைவர் தேர்தல்; பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக ஜெக்தீப் தன்கர் அறிவிப்பு

Jagdeep Dhankhar, West Bengal Governor, is NDA’s Vice President candidate: பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கரை இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளதாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

தற்போதைய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதி முடிவடைய உள்ளதால் துணை ஜனாதிபதி பதவி காலியாகிவிடும். எனவே துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதியும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 19-ம் தேதியும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: இலவசங்களை ‘ரெவ்டி கலாச்சாரம்’ என்று விமர்சித்த மோடி; கெஜ்ரிவால் பதிலடி

இந்தநிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் துணைக் குடியரசு தலைவர் வேட்பாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெக்தீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜெக்தீப் தன்கர் தற்போது மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். ஜூலை 2019 இல் மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்து, ஜெக்தீப் தன்கர் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கத்துடன் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளில் முரண்பட்டு வருகிறார்.

துணை ஜனாதிபதியின் அலுவலகம் இந்தியாவின் ஒரு தனித்துவமான அம்சமாகும், இது பாராளுமன்ற முறையைப் பின்பற்றுகிறது, மேலும் காமன்வெல்த் உட்பட பிற ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற அமைப்பு இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Vice President Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment