Advertisment

உத்தரவை மீறி கட்டிடங்கள் இடிப்பு… உடனே களத்தில் இறங்கிய தலைமை நீதிபதி

Jahangirpuri demolition: ஜஹாங்கிர்புரியில் உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், தடை உத்தரவை சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்ப தலைமை நீதிபதி ரமணா உத்தரவிட்டார்.

author-image
WebDesk
New Update
உத்தரவை மீறி கட்டிடங்கள் இடிப்பு… உடனே களத்தில் இறங்கிய தலைமை நீதிபதி

டெல்லியில் ஜஹாங்கிர்புரியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தற்போது நிலையே தொடரவும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணை நாளை(வியாக்கிழமை) நடைபெறும் என தெரிவித்துள்ளது

Advertisment

இவ்விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு சென்ற மூத்த வழக்கறிஞர் தேவ், டெல்லியில், கலவரம் நடந்ததாகக் கூறப்படும் ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள இடிப்புக்கு உத்தரவிடப்பட்டது முற்றிலும் அங்கீகரிக்கப்படாத, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. யாருக்கும் எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 5 முதல் 15 நாட்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும். அதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது.

கட்டிடம் இடிக்கும் பணி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.ஆனால், நாங்கள் அதைக் குறித்து விவாதிக்கப்போகிறோம் என்பதை அறிந்து, காலை 9 மணிக்கே ஆக்கிரமிப்பு இடிப்பு பணியை தொடங்கினர்.

கட்டிடம் இடிக்கும் பணியை நிறுத்தவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், இடிக்கும் பணி நிறுத்தப்படவில்லை. ஏன் என கேள்வி எழுப்பியபோது, அதற்கான ஆர்டர் கடிதம் எதுவும் வரவில்லை என சொல்லப்பட்டதாக தெரிகிறது. உடனடியாக, கட்டிடம் தொடர்ந்து இடிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா கவனத்திற்கு தேவ் கொண்டு சென்றார். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும், இடிக்கும் பணி நிறுத்தப்படாது தவறான முன்னுதுரானத்தை மக்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் தெரிவிக்குமாறு எஸ்சி பதிவேட்டிற்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 16 ஆம் தேதி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது ஜஹாங்கீர்பூரி பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் காவல் துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர். வன்முறைக்கு காரணமாக 24 பேர் கைதது. மேலும், வன்முறை நிகழ்ந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Delhi Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment