Advertisment

தொடரும் ஜெய் ஸ்ரீ ராம் தாக்குதல்.. இஸ்லாமிய மாணவர்களை தாக்கிய கும்பல்!

மதராஸா பள்ளி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jai Shri Ram slogan

Jai Shri Ram slogan

Jai Shri Ram slogan : மதராஸா பள்ளி மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என முழங்க சொல்லி கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாடெங்கும் கடந்த சில மாதங்களாக ஜெய் ஸ்ரீ ராம் ஸ்லோகத்தை கூற மறுக்கும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் பல்வேறு கண்ட குரல்களை எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில்,ஜார்கண்டில் ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்த இஸ்லாமிய இளைஞர் ஷாம்ஸ் தப்ரெஸ் ஒரு நாள் இரவு முழுவதும் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது உத்திரப்பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மதராஸா பள்ளி மாணவர்கள் மீதும் ஜெய் ஸ்ரீ ராம் கூற மறுத்ததால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் செயல்பட்டு வரும் மதராஸா பள்ளியில் இஸ்லாமிய கல்வி கற்றுத்தரப்படும். இந்த பள்ளிக்கு அருகில் இருக்கும் ஜிஐசி விளையாட்டு மைதானத்தில் அப்பள்ளி மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அந்த மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை கூற சொல்லி வற்புறுத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த மாணவர்களை பலமாக தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து மதராஸா மாணவர்கள் ஓட முயன்ற போது, அவர்கள் மீது கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். இதல் காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதராஸா பள்ளி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, கோட்வாலி காவல் நிலைய எஸ்.எச்.ஓ தினேஷ் சந்திர மிஸ்ரா ” குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 323, 352, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Uttar Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment