Advertisment

'தீபிகா படுகோனே, உனக்கு இருக்கு' - ஜாமியா துப்பாக்கிச்சூடு நபரின் பேஸ்புக் பதிவுகளால் பரபரப்பு

Jamia shooter Facebook page: ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்த பதிவில், ஷாஹீன் பாக் விரைவில் ஜாலியன் வாலாபாக் ஆக மாறும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jamia protest shooting, jamia protest shooter facebook, jamia shooter facebook profile, jamia caa protest violence shooting, delhi jamia students shooting injured, delhi police city news

jamia protest shooting, jamia protest shooter facebook, jamia shooter facebook profile, jamia caa protest violence shooting, delhi jamia students shooting injured, delhi police city news

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஜாமியா மிலியா பல்கலைகழகத்தில் அமைதி பேரணி நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில், துப்பாக்கி ஏந்திய 17 வயது சிறார் ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலை நிகழ்த்தப்படுவதற்கு முன்னதாக 2 மணிநேரங்களுக்கு முன்னர், அவர், ஷாஹீன் பாக் - உங்கள் விளையாட்டு முடிந்தது உள்ளிட்ட 9 பேஸ்புக் பதிவுகளும் 7 பேஸ்புக் லைவ் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

Advertisment

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், இந்த நிகழ்வை பேஸ்புக் லைவ் செய்ததால், அவரது பேஸ்புக் கணக்கை, பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ளது. அந்த நபரின் பேஸ்புக் பதிவுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இவர் 2018ம் மே மாதம் ஒரு பேஸ்புக் அக்கவுண்டை துவக்கியுள்ளார். அதில் 504 நண்பர்கள் இருந்துள்ளனர். பின்னர் அதே ஆண்டு ஜூலை மாதம் மற்றொரு அக்கவுண்டை துவக்கியுள்ளார். இதில் 3626 பேர் நண்பர்களாக உள்ளனர்.

இவரது பேஸ்புக் பதிவுகளிலிருந்து தெரியவந்துள்ளதாவது, இவர் பஜ்ரங் தள் அமைப்புடன் தொடர்புடையவர். இவரது புரோபைல் பிக்சரில், உத்தரபிரதேச மாநிலம் சார்தா பல்கலைகழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவர்களை தாக்கிய வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தீபக் சர்மாவுடன் இணைந்து இருப்பதுபோன்று உள்ளது.

மேலும் அவரது சில பதிவுகளில் அமித் ஷாவிற்கு ஆதரவான கருத்துகளையும், மனோஜ் திவாரி டில்லி முதலல்வர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

publive-image

குடியுரிமை சட்ட திருத்ததிற்கு ஆதரவாக சில பதிவுகளையும், சில பேஸ்புக் லைவ் வீடியோக்களையும் அவர் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். சிஏஏ சட்டத்தை எதிர்த்து டில்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்த பதிவில், ஷாஹீன் பாக் விரைவில் ஜாலியன் வாலாபாக் ஆக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக, இந்த இடத்தில் இந்து மீடியாக்கள் எதுவும் இல்லை, இங்கு நான் மட்டுமே இந்து என்பது போன்ற பதிவுகளை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன். இது என்னுடைய இறுதி பயணம். ஜெய் ஸ்ரீராம், எனது குடும்பத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்பது போன்ற பதிவுகளை அவர் பதிவிட்டுள்ளார்.

publive-image

ஜனவரி 28ம் தேதி பதிவில், ஜனவரி 31ம் தேதி வரத பொறுத்திருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

ஜனவரி 11ம் தேதி பதிவில், நான் பா.ஜ. ஆதரவாளர் தான். எனக்கு நாடு தான் முதலில் பிறகு தான் கட்சியும் கட்சி தலைவர்களும் என்று பதிவிட்டுள்ளார்.

டில்லி பல்கலைகழக மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே போராட்டத்தில் பங்கேற்ற போட்டோவை பதிவிட்ட இந்த நபர், தீபிகா உனக்கு செம அடி இருக்கு பக்தாக்கள் தயாராக உள்ளனர். உனது படம் மட்டுமல்ல, சல்மான் கானின் படமும், போட்ட பணத்தை எடுக்காது என்று பதிவிட்டுள்ளார். அய்ஷா கோஷை சந்தித்த தீபிகா, 2019 புலவாமா தாக்குதலில் பலியான வீரர்களின் வீட்டிற்கு செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது பேஸ்புக் பக்கத்தில் உள்ள வீடியோக்களில் பெரும்பாலானவைகளில் எப்போதும் துப்பாக்கியுடனே காணப்படுகிறார்.

பேஸ்புக் நிறுவனம் விளக்கம் : இவரின் மத துவேசம் குறித்த பேச்சு, வன்முறை சம்பவங்கள் , வீடியோக்களால், இவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Delhi Facebook
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment