Advertisment

50 வயதில்தான் சபரிமலைக்கு வருவேன்.. 9 வயது சிறுமியின் இந்த முடிவுக்கு காரணம் ?

எனது மகள் இனி 40 வருடங்கள் கழித்துதான் சபரிமலைக்கு வர இயலும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலை

சபரிமலை

மதுரையைச் சேர்ந்த 9வயது சிறுமி ’இனி 50 வயதில்தான் சபரிமலைக்கு வருவேன்’ என்று கையில் பதாகைஏந்தி சபரிமலைக்கு வருகை தந்துள்ளார்.

Advertisment

சபரிமலை செல்லும் பெண்கள்:

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் உள்ளே சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை பலர் எதிர்த்து வந்தனர். இந்த தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு ஐப்பசி பூஜைக்காக பல பெண்கள் வந்தனர். இருந்தாலும் இன்றுவரை சபரிமலை சன்னிதானத்திற்குள் நுழையமுடியாமல் உள்ளனர்.

10-50 வயது பெண்கள் உள்ளே நுழைய விடாமல் போராட்டக்காரர்கள் தடுக்க தொடங்கினார்கள். பல போலிஸுகள் பாதுகாப்பிற்கு இருந்தாலும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தே வருகின்றனர். நேற்று பாதுகாப்பில் சன்னிதானம் வரைக்கும் சென்ற இரண்டு பெண்களும் பக்தர்களின் போராட்டத்திற்கு பிறகு திருப்பி அனுப்பப்பட்டனர்.

publive-image

சபரிமலையில் போராட்டம், பதற்றம், 144 தடை உள்ள நிலையில் நேற்று தனது தந்தையுடன் மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஜனனி சபரிமலைக்கு மாலை அணிந்து, இருமுடிகட்டி சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் தனது கையில் ஒரு பதாகை வைத்திருந்தார்.

அதில், என் பெயர் ஜெனனி. எனக்கு 9 வயதாகிறது. இனி நான் 50 வயதில்தான் சபரிமைலைக்கு வர முடியும்.மீண்டும் 50 வயதில் நான் சபரிமலைக்கு வருவதற்காக ஆர்வத்துடன் காத்திருப்பேன்’’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து பேசிய அவரது தந்தை கூறியதாவது ‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அனைத்து வயது பெண்களும் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்பது கவலையாக இருக்கிறது.எனது மகள் இனி 40 வருடங்கள் கழித்துதான் சபரிமலைக்கு வர இயலும்’’ என்று தெரிவித்தார்.

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment