நேரு நினைவு தினம்: சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி!

‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’

nehru death anniversary

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள  நேருவின் நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

வலிமையான சுதந்திர தேசத்தை உருவாக்கியதில் நேருவின் பங்கு அளப்பரியது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’ என பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jawaharlal nehru 55th death anniversary

Next Story
காங்கிரஸ் தோல்விக்கு மூத்த தலைவர்கள் தான் காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்CWC Rahul Gandhi Blames Senior Leaders
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com