Advertisment

J&K: தீவிரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம் - உள்ளூர் நபரும் பலி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jammu and kashmir, jammu kashmir encounter, jammu kashmir encounter news, sopore encounter, sopore militant attack, சிஆர்பிஎஃப்

jammu and kashmir, jammu kashmir encounter, jammu kashmir encounter news, sopore encounter, sopore militant attack, சிஆர்பிஎஃப்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூர் பகுதியில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

Advertisment

புதன்கிழமை காலை வடக்கு காஷ்மீரின் சோப்பூரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் மற்றும் ஒரு உள்ளூர் வாசி நபரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மேலும் மூன்று சிஆர்பிஎஃப் ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.. தாக்குதலின் போது மூன்று வயது சிறுவனும் மீட்கப்பட்டான்.

இன்று காலை சோபூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள் என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். "ஜி / 179 சிஆர்பிஎஃப் துருப்புகள் மற்றும் ஜே.கே.பி மீது, 07:35 மணியளவில் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உடனடியாக பதிலடியும் கொடுக்கப்பட்டது," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இன்றைய முக்கிய மற்றும் சமீபத்திய செய்திகளின் அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தாக்குதலில் கொல்லப்பட்ட உள்ளூர்வாசி அவரது காரில் இருந்து வெளியே இழுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். சிஆர்பிஎஃப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தீவிரவாதிகள் அவரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அவர் கொல்லப்பட்டதாகக் கூறினார். "சோபூரிலிருந்து குப்வாராவுக்கு வந்து கொண்டிருந்த அந்த நபரின் வாகனம் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கியது. வாகனத்தை ஓட்டி வந்த ஒரு முதியவர் காரை நிறுத்திவிட்டு, பாதுகாப்பான இடத்திற்காக செல்ல வாகனத்திலிருந்து கீழே இறங்கினார், ஆனால் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் கொல்லப்பட்டார். பின்னர் அந்த சிறுவன் அருகில் இருந்த எஸ்.எஃப் படையால் மீட்கப்பட்டான்.

இந்த குற்றச்சாட்டுகளை Sopore போலீசார் மறுத்தனர். "சில சமூக தளங்களில், அந்த உள்ளூர்வாசி வெளியே இழுத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வலம் வரும் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் உண்மைகளுக்கு அப்பாற்பட்டது. சோபூர் போலீஸ் இந்த செய்திகளை உறுதியாக மறுக்கிறது. தவறான அறிக்கைகள் மற்றும் வதந்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கப்படும்" என்று சோபூர் காவல்துறை தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் அப்னி கட்சியும் (ஜே.கே.ஏ.பி) உள்ளூர்வாசியின் மரணத்தில் சார்பற்ற விசாரணை நடத்தக் கோரியது. "இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதுகாப்புப் படையினர் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் இதுபோன்ற சம்பவங்களின் போது எந்தவிதமான சேதமும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று ஜே.கே.ஏ.பி செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

தெற்கு காஷ்மீரின் பிஜ்பெஹாராவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் மற்றும் ஐந்து வயது சிறுவன் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎஃப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள், ரோந்து சென்ற ஜி / 90 பட்டாலியன் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றார். "90 பட்டாலியன் சிஆர்பிஎஃப் ஒரு கான்ஸ்டபிள் மீது புல்லட் பாய வீர மரணம் அடைந்தார்" என்று அவர் கூறினார். இதற்கிடையில், டிரால் பகுதியில், மூன்று ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஏப்ரல் மாதத்தில், வடக்கு காஷ்மீரின் சோபோரில் சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் naka எனும் சோதனைச் சாவடியில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment